ஆறாக ஓடிய சரக்கு.. கோடிக்கணக்கில் ரொக்கம்! மத்தியப் பிரதேசத்தில் கறார் காட்டிய தேர்தல் ஆணையம்
போபால்: மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெறுகிறது. எனவே கடந்த 9ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் இங்கு அமலில் இருக்கின்றன. இந்நிலையில் இதுவரை சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட ரூ.200 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மது பாட்டில்கள், தங்கம், போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
பொதுவாக தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டால் அம்மாநிலத்தில் சட்டமன்ற அலுவலகங்கள் அனைத்தும் மூடப்படும். அதேபோல நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகங்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் வரும். சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு அரசு வழங்கியிருந்த வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும். அதேபோல ரூ.50,000க்கு மேல் ரொக்கமாக கொண்டு சென்றால் அதற்கான உரிய ஆதாரங்கள் இருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் அப்பணம் கைப்பற்றப்படும்.

இப்படியான நடத்தை விதிகள்தான் கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி முதல் மத்தியப் பிரதேசத்தில் அமலுக்கு வந்திருக்கின்றன. எனவே வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததிலிருந்து தற்போது வரை சுமார் ரூ.266 கோடி மதிப்புள்ள சட்டவிரோதமாக எடுத்து செல்லப்பட்ட ரொக்கம், தங்கம், வெள்ளி நகைகள், மது பாட்டில்கள், போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி அனுபம் ராஜன் கூறியுள்ளார்.
பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழு மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் இவை அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் ரூ.25.05 கோடி அளவுக்கு ரொக்க பணமும், ரூ.36.99 கோடி மதிப்புள்ள 19.57 லட்சம் லிட்டர் சட்டவிரோத மதுபானமும், ரூ.11.70 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள், ரூ.75.06 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலையுயர்ந்த ஆபரணங்கள் அடங்கும் என ராஜன் கூறியுள்ளார்.
மொத்தம் 230 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்தில் 4,359 வேட்பு மனுக்கள் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 31ம் தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் 2,916 மனுக்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதேபோல இன்றுடன் வேட்புமனுவை திரும்பப்பெற காலக்கெடு முடிவடைகிறது. இதனைத்தொடர்ந்து வரும் 17ம் தேதி அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, டிசம்பர் மாதம் 3ம் வாக்குகள் எண்ணப்படுகிறது. அன்றைய தினமே முழு ரிசல்ட்டும் வெளியாகிறது. தற்போது மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. இந்த முறையும் அக்கட்சியே மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயன்று வரும் நிலையில், காங்கிரஸ் பெரும் போட்டியாளராக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications