Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெட்ரூம் இருட்டில்.. எட்டி எட்டி பார்த்த கணவர்.. கூடவே நண்பன்.. கையில் "ரஸ்ஸல் வைபர்".. இப்படியுமா?

கண்ணாடி விரியனை ஏவி மனைவியை கொல்ல முயன்ற கணவர் கைதாகி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

போபால்: 2வது மனைவியை கொல்வதற்காக, பாம்பை ஏவி உள்ளார் கணவர்.. ஆனால், மனைவியை ஏன் கொல்ல துணிந்தார் என்பது குறித்த தகவல்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். என்ன நடந்தது?

மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சூரை சேர்ந்தவர் மோஜிம்.. இவரது மனைவி பெயர் சானு.. சில வருடங்களுக்கு முன் கணவரிடம் கோபித்து கொண்டு சானு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.. மனைவி பிரிந்ததால், மோஜிம் 2வது திருமணம் செய்து கொண்டார்..

அந்த பெண்ணின் பெயர் அஜ்மேரி ஹலிமா.. இவர்கள் 2 பேரும் மகிழ்ச்சியுடன் குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர்.. அப்போது சில காலத்துக்கு பிறகு, திடீரென சானு வீட்டுக்கு திரும்பிவிட்டார்..

 ஜன்னல் கம்பி

ஜன்னல் கம்பி

முதல் மனைவி வந்துவிடவும், 2வது மனைவியை பாரமாக நினைத்தார் மோஜிம்.. முதல் மனைவியை பார்த்ததுமே மோஜிம்மின் மனமும் மாறிவிட்டது.. அதனால், பாரமாக உள்ள 2வது மனைவி ஹலிமாவை கொலை செய்ய முடிவு செய்தார்.. பாம்பு பிடிக்கும் ஒருவருடன் பேசி, ரஸ்ஸல் வைப்பர் அதாவது கண்ணாடி விரியன் பாம்பினை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார் மோஜிம்.. சம்பவத்தன்று, பெட்ரூம் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, 2வது மனைவி ஹலிமா மட்டும் ரூமில் இருந்தார். உடனே பாம்பை ஜன்னல் வழியாக ரூமில் விட்டார் மோஜிம்.. பாம்பு ஹலிமாவை கடித்துள்ளது. ஆனால், அவர் இறக்கவில்லை.

 2வது மனைவி

2வது மனைவி

மறுநாள் பாம்பின் விஷத்தை, ஹலிமாவுக்கு வலுக்கட்டாயமாக செலுத்தியும் அவர் இறக்கவில்லை.. ஆனால், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹலிமா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சையும் நடந்து வருகிறது. மோஜிம், பாம்பு பிடிப்பவர் உட்பட பலரையும் போலீசார் இந்த வழக்கில் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.. இந்நிலையில், 2வது மனைவியை எதற்காக மோஜிம் கொல்ல முயன்றார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

கள்ளக்காதல்

கள்ளக்காதல்

மோஜிம் என்பவர் அந்த அளவுக்கு நல்லவர் இல்லையாம்.. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளார்.. அதனால் அவர் ஜெயிலுக்கும் போயுள்ளார்.. இவர் ஜெயிலுக்குள் இருந்த சமயத்தில்தான், முதல் மனைவிக்கு இன்னொரு நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.. அதனால்தான், அவருடன் ஓடிவிட்டார்.. ஜெயிலில் இருந்து வெளியே வந்த மோஜிம் அஜ்மீரி, மனைவி வேறொருவருடன் சென்றதை கேட்டு அதிர்ச்சியடைந்தார்... அதன்பிறகுதான், ஹலிமா என்பவரை 2வதாக திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளார்.

 ரகசிய சந்திப்பு

ரகசிய சந்திப்பு

ஆனாலும், முதல் மனைவியை மோஜிம்மால் மறக்க முடியவில்லை.. தன்னை விட்டு பிரிந்ததையும் சகித்துக் கொள்ள முடியவில்லை.. அதனால் மறுபடியும் எப்படியாவது தன்னுடைய முதல் மனைவியை சந்தித்து பேச வேண்டும், அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.. பிறகு, கஷ்டப்பட்டு ஓடிப்போன முதல் மனைவியை கண்டுபிடித்துவிட்டார்.. அடிக்கடி முதல் மனைவியை ரகசியமாக சந்தித்தும் வந்துள்ளார்.. இந்த விஷயம், 2வது மனைவி ஹலிமாவுக்கு தெரிந்து மனம் வேதனைப்பட்டுள்ளார்.. அம்போவென விட்டுட்டு ஓடிப்போன முதல்மனைவியை பற்றி நினைக்க வேண்டாம் என்று மோஜிம்மை கண்டித்துள்ளார்..

கெஞ்சல்

கெஞ்சல்

முதல் மனைவியை சந்திக்க கூடாது என்று ஹலிமா கெஞ்சியும் உள்ளார். இதுதான் தம்பதிக்கு இடையே தகராறாக உடுவெடுத்துள்ளது. முதல் மனைவி பற்றி, ஹலிமா பேசினாலே, மோஜிம்முக்கு பிடிப்பதில்லை.. அதனால், ஹலிமாவை அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார்... எனினும், தன்னுடைய மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மோஜிம்மின் கொடுமையை சகித்துக் கொண்டு அவருடனேயே வாழ்ந்து வந்துள்ளார்.. ஆனால், ஹலிமா உயிருடன் இருக்கும்வரை முதல் மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாது என்று நினைத்தார் மோஜிம்..

 கண்ணாடி விரியன்

கண்ணாடி விரியன்

அதற்காக ஹலிமாவை கொல்ல திட்டமிட்டார்... அதற்காக தன்னுடைய நண்பர் ரமேஷின் உதவியை நாடினார்.. அவர் பாம்புகளை பிடிப்பதில் கைதேர்ந்தவர் என்பதால், விஷப் பாம்பு வேண்டும் என்று மோஜிம் கேட்டுள்ளார். ரமேஷூம் விஷ பாம்பை பிடித்து கொண்டு, கடந்த மே 8ம் தேதி இரவு மோஜிம் வீட்டிற்கு சென்றார்.. வீட்டின் விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டிருந்த நேரத்தில், ஹலிமா படுத்திருந்த பெட்ரூமில் விஷப் பாம்பை உள்ளே விட்டனர் நண்பர்கள் இருவரும்.. அந்தப் பாம்பு ஹலிமாவின் காலில் 2 இடத்தில் கொத்தி உள்ளது.. இதனால் அதிர்ச்சியடைந்த ஹலிமா, அலறல் சத்தத்துடன் விளக்கை எரியவிட்டார்...

 பெட்ரூம்

பெட்ரூம்

அப்போதுதான், கணவரும், ரமேஷூம் அங்கே நின்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.. ஆனால், சிறிது நேரத்தில் ஹலிமாவின் உடலில் பாம்பின் விஷம் ஏறியதால், அவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயக்கமடைந்தார்... ஹலிமா மயக்கமடைந்தவுடன், அவர் இறந்துவிட்டதாக நினைத்து மோஜிமும், ரமேஷூம் வெளியே சென்றுவிட்டனர். ஆனால், கொஞ்ச நேரத்திலேயே ஹலிமாவுக்கு சுயநினைவு திரும்பியதை நண்பர்கள் இருவரும் எதிர்பார்க்கவில்லையாம்.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாம்பு கடித்ததுமே அரை மயக்கத்தில், கிடந்த ஹலிமாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர்...

டேஞ்சர்

டேஞ்சர்

அங்கு தீவிர சிகிச்சையில் உயிர் தப்பினார் ஹலிமா.. ஆனாலும், உயிர் பிழைத்தாரே தவிர, உடல்நலம் தேறவில்லை.. எனவே, மேல் சிகிச்சைக்காக உதய்பூருக்கு மாற்றப்பட்டார்.. அங்குதான், கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வருகிறார்... பாம்பு கடித்த காலை வெட்டி எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்கிறார்களாம்.. சிகிச்சை ஒருபக்கம் நடந்து வந்தாலும், மோஜிம்மிடம் விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2வது மனைவிக்காக, முதல் மனைவியை கணவர்கள் டைவர்ஸ் செய்வார்கள்.. அல்லது பிரிந்து செல்வார்கள்.. ஆனால் இங்கே முதல் மனைவிக்காக, 2வது மனைவியை கொலை செய்யும் வரை சென்றது வியப்பை தந்து வருகிறது..

 கிரேட் எஸ்கேப்

கிரேட் எஸ்கேப்

அதைவிட ஆச்சரியம் என்னவென்றால், 2 முறை இவ்வளவு கொடூர விஷப்பாம்பு கடித்தும் ஹலிமா உயிர் பிழைத்துள்ளார்.. பொதுவாக, கண்ணாடி விரியன் பாம்புகள் கடித்தால், உயிர்போய்விடுமாம்.. அந்த விஷமும், உடலை விட்டு வெளியேறாது.. இந்த பாம்பு கடித்த சில மணி நேரங்களிலேயே அந்த இடம் அழுக ஆரம்பித்துவிடும்.. நரம்புகளிலும் ரத்தம் கட்டிக்கொள்ளும்.. இவ்வளவு இருந்தும், ஹலிமாவின் உயிர் மீட்கப்பட்டுள்ளது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+