பத்தாம் வகுப்பு தேர்வை மகளுடன் எழுதி தேர்ச்சி அடைந்த 43 வயது பெண்
மும்பை: மும்பையை சேர்ந்த 43 வயது பெண்ணும், அவரது மகளும் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் சரிதா ஜகதே(43). அவரது மகள் ஸ்ருதிகா(16). குடும்ப சூழலால் 4ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய சரிதா தனது மகளுடன் சேர்ந்து இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார்.

தேர்வில் தாயும், மகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர். சரிதா 44 சதவீத மதிப்பெண்களும், ஸ்ருதிகா 69 சதவீத மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
இது குறித்து சரிதா கூறுகையில்,
நான் 4ம் வகுப்பு படிக்கையில் எனது தந்தை இறந்துவிட்டார். நாங்கள் 4 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர். குடும்ப சூழலால் நாங்கள் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றோம். படிப்பை நிறுத்தி 35 ஆண்டுகள் கழித்து மீண்டும் படிப்பை தொடருமாறு என் கணவர் வலியுறுத்தினார்.
அதன் பிறகே நான் படிப்பைத் தொடர்ந்தேன். தேர்வில் தேர்ச்சி அடைந்ததில் மகிழ்ச்சி. என் மூத்த மகள் ஷிதிஜா இந்த ஆண்டு ப்ளஸ் 2 தேர்வு எழுதி 48 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications