குழந்தை கையில் ரத்தத்தை பார்த்த தாய் மாரடைப்பால் சாவு! கேரளாவில் சோகம்
பாலக்காடு: குழந்தையின் கையில் ஊசியை பிரிக்கும்போது வழிந்த ரத்தத்தை பார்த்த தாய் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நடந்துள்ளது.
கேரள மாநிலம் பாலாக்காடு மாவட்டம் முண்டூரை சேர்ந்தவர் பிலிகுன்னில் ஜெயராம். பெயிண்டர். இவரது மனைவி ஸ்ரீபிரியா. இத்தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் ஷரவ்யா என்ற பெண் குழந்தை உள்ளது.
ஷரவ்யாவுக்கு சில நாட்களாக காய்ச்சல் மற்றும் சளி பிரச்சினை ஏற்பட்டது. சிகிச்சைக்காக பாலகாட்டில் உள்ள மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு ஸ்ரீபிரியாவும், ஜெயராமும் கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கபட்டது.
கடந்த 23ம் தேதி குழந்தை கையில் இருந்த ட்ரிப் ஊசியை டாக்டர்கள் அகற்றினர் அப்போது எதிர்பாரதவிதமாக குழந்தை கையில் இருந்து ரத்தம் வழிந்தோடியது. இதை பார்த்ததும், ஸ்ரீபிரியா அதிர்ச்சியடைந்துள்ளார். பதற்றத்தால் அப்படியே மயங்கி சாய்ந்துள்ளார்.
உடனடியாக. டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தனர். ஆனால், ஸ்ரீபிரியா மரணமடைந்துவிட்டது அறிந்து அதிர்ச்சியடைந்தனர். ஸ்ரீபிரியா மாரடைப்பால் மரணமடைந்துள்ளது உறுதியானது. குழந்தையின் கையில் ரத்தத்தை பார்த்த தாய் அதிர்ச்சியில் மரணித்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "ஒரு நிமிட ரத்த வழிதலுக்கு அதிர்ச்சியடைந்த ஸ்ரீபிரியா, குழந்தையை வாழ்நாள் முழுக்க தவிக்கவிட்டு சென்றுவிட்டாரே" என்று உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை நெகிழ செய்தது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications