கணவரிடம் இருந்து காப்பாற்ற 2 மகள்களை கழுத்தை அறுத்துக் கொன்ற எம்.பி.ஏ. பட்டதாரி பெண்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் எம்.பி.ஏ. பட்டதாரி பெண் ஒருவர் தனது 8 மற்றும் 3 வயது மகள்களின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வருபவர் ரஜினி. எம்.பி.ஏ. அவரது கணவர் வினய் சுட்கே. அவர்களின் மகள்கள் அஷ்விகா(8), அவிஷ்கா(3). வினய் பேகம்பட்டில் பரிசுப் பொருட்கள் கடை வைத்துள்ளார்.

ரஜினி புதன்கிழமை மாலை தனது மகள்களின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இரவு 9.45 மணிக்கு வீட்டிற்கு வந்த வினய் மகள்கள் பிணமாகக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மகள்களை கொன்ற பிறகு ரஜினி டேங்க் பந்த் பகுதிக்கு சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வீட்டிற்கு வந்தார்.
வீட்டில் இருந்த வினயிடம் அவர் நடந்ததை எல்லாம் தெரிவித்தார். மேலும் தனது தோழிகளுக்கும் மகள்களை கொலை செய்தது குறித்து எஸ்.எம்.எஸ். அனுப்பினார் ரஜினி. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரஜினியை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் கூறுகையில்,
என் மூத்த மகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தன்னை ஒருவர் தகாதபடி தொட்டதாக கூறினார். அதில் இருந்து அவர் தனது தந்தையை பார்த்தாலே பயத்தில் நடுங்குவார். அதன் மூலம் என் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது என் கணவர் தான் என எனக்கு தோன்றியது.
இது தொடர்பாக எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. என் கணவரிடம் இருந்து என் மகள்களை காப்பாற்றவே அவர்களை கொலை செய்தேன் என்றார்.
ரஜினி தம்பதி அண்மையில் தான் மகாராஷ்டிராவில் இருந்து ஹைதராபாத்திற்கு வந்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications