ரூல்ஸை பாலோ பண்ணுங்கடா.. ஓடும் ரயில் முன் ரீல்ஸ் எடுக்க முயன்ற மைனர் சிறுவனுக்கு நேர்ந்த கதி.. ஷாக்
புவனேஸ்வர்: ஒடிசாவை சேர்ந்த சிறுவன் இன்ஸ்டாகிராம் மோகத்தில் வேகமாக வரும் ரயில் அருகே நின்று ரீல்ஸ் எடுக்க முயன்றார். அப்போது அந்த ரயில் சிறுவன் மீது மோதியதில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்த சோக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது சிறுவர்கள் முதல் இளைஞர்கள், முதியவர்கள் வரை பலரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட தொடங்கி உள்ளனர். குறிப்பாக ஆபத்தான இடங்களில் ரீல்ஸ்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். கொஞ்சம் மிஸ்ஸானாலும் மரணம் வரும் சூழலிலும் கூட உயிரை பணயம் வைத்து ரீல்ஸ் செய்கின்றனர்.

இப்படி ரீல்ஸ் மோகம் பலரையும் ஆட்டிப்படைக்கிறது. அதேவேளையில் ரீல்ஸ் மோகத்தால் பலரும் உயிரிழந்துள்ளனர். மலைகளின் நுனிப்பகுதியில் நின்று ரீல்ஸ் செய்வது, ஆபத்து நிறைந்த அருவிகளில் ரீல்ஸ் எடுப்பது, ரயில்களில் சாகசம் செய்து ரீல்ஸ் எடுப்பது என பல சந்தர்ப்பங்களில் இளைஞர்கள் உயிரை பறிகொடுத்துள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தாலும் கூட இன்னும் சிலர் திருந்தவில்லை. தற்போது ஒடிசாவில் ரீல்ஸ் எடுக்க போன சிறுவன் ரயில் மோதி தூக்கி வீசப்பட்டு இறந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஒடிசா மாநிலம் பூரி மாவட்டம் மங்களாகாட் பகுதியை சேர்ந்த சிறுவன் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்துள்ளார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்களை பெறுவதற்காக பல்வேறு வீடியோக்களை அவர் பதிவிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் தான் சிறுவன் தனது தாயுடன் தட்சினகாளி கோவிலுக்கு தரிசனத்துக்காக சென்றார். அப்போது அந்த கோவில் அருகே ஜனகேதெய்ப்பூர்வ ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ஸ்டேஷன் அருகே இரும்பு மேம்பாலத்தில் ரயில் செல்லும். இது பார்க்க அழகாக இருக்கும். இதனால் அந்த இரும்பு மேம்பாலத்தின் மீது ஏறி ரயில் வரும்போது ரீல்ஸ் எடுக்க சிறுவன் முடிவு செய்தார்.
அதன்படி அவர் மேம்பாலத்தில் நின்றார். பின்னால் ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. சிறுவனை பார்த்தவுடன் ரயில் இன்ஜின் டிரைவர் ‛ஹாரன்' அடித்தார். ஆனால் சிறுவன் ரயில் தண்டவாளத்தை ஒட்டியே நின்றார். கையில் செல்போன் வைத்து கொண்டு ரயில் முன்பு ரீல்ஸ் செய்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த ரயில் சிறுவன் மீது மோதியது. இதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டு இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் ரயில்வே அதிகாரிகள், ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது சிறுவன் ரீல்ஸ் எடுக்க முயன்றதும், அப்போது ரயில் அவன் மீது மோதியது தொடர்பான வீடியோ வெளியாகி அனைவரையும் பதற வைத்துள்ளது.
தற்போது பலியான சிறுவனுக்கு அவரது குடும்பத்தினர் பலமுறை அறிவுரை வழங்கி உள்ளனர். ஆபத்தான இடங்களில் ரீல்ஸ் எடுக்க வேண்டாம் என்று தொடர்ந்து கூறியுள்ளனர். ஆனால் அவர் கேட்கவில்லை. அதேபோல் தற்போது சிறுவன் ரீல்ஸ் எடுத்த இடத்திலும் ரயில்வே சார்பில் ஆபத்தான பகுதி என்று வார்னிங் செய்யப்பட்டு இருந்தது. அதனையும் மீறி அந்த சிறுவன் ரீல்ஸ் எடுப்பதற்காக சென்று உயிரை பறிகொடுத்துள்ளார். அவர் ரயில்வேயின் ரூல்ஸை மதித்து நடந்திருந்தால் இன்று அவர் உயிருடன் இருந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications