ம.பியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 14 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!
லிதோரா: மத்திய பிரதேச மாநிலத்தில், ஆழ்துளை கிணறுக்குள் விழுந்த குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. மீட்பு குழுவினர் பல மணி நேரம் போராடியும் குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை.
மத்திய பிரதேச மாநிலம், லிதோரா கிராமத்தை சேர்ந்த 14 மாத குழந்தை கிருஷ்ணா. நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையின் பெற்றோர் வயல்வெளியில் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அங்கிருந்த மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.

குழந்தையின் அழுகுரல் கேட்டு பெற்றோர், அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் மீட்பு குழுவினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சுமார் 18 அடி ஆழத்தில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது.
ஆழ்துளை கிணறு அமைந்துள்ள பகுதியில் பாறைகள் இருந்ததால், மீட்பு பணிக்கு இடையூறு ஏற்பட்டது. மருத்துவ குழுவினர் குழாய் மூலம் குழந்தைக்கு ஆக்ஸிஜனை செலுத்தி வந்தனர்.
பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர், நேற்று இரவு 9 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தை மீட்கப்பட்டது. குழந்தையை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, குழந்தை இறந்தது தெரியவந்தது.
குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications