Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“மகாத்மா காந்தி வன்முறையை வேடிக்கை பார்த்தார்”.. சர்ச்சை கவிதையை கைத்தட்டி வரவேற்ற மபி பாஜக எம்எல்ஏ

காந்தியை விமர்சித்து வாசித்த கவிதையை கேட்டு மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏ. கைத்தட்டி வரவேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேச மாநிலம் சியோனியில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர் ஒருவர் தேசத் தந்தை மகாத்மா காந்தியை விமர்சிக்கும் வகையில் வாசித்த கவிதையை கேட்டு பாஜக எம்.எல்.ஏ. கைத்தட்டி வரவேற்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறும் மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் விகாஸ் யாத்திரையின் ஒரு பகுதியாக சிஎம் ரைஸ் என்ற பள்ளியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கடந்த 5 ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சியோனி தொகுதி பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் தினேஷ் ராய் முன்மம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

காந்திக்கு எதிராக கவிதை

காந்திக்கு எதிராக கவிதை

இந்த நிகழ்ச்சியில் மாணவர் ஒருவர் வாசித்த கவிதைதான் தற்போதைய சர்ச்சைக்கு மூலக்காரணம். அவர் தன்னுடைய கவிதையில் தேசத் தந்தை மகாத்மா காந்தியை விமர்சித்து உள்ளார். பள்ளி விழா மேடையில் ஏறிய அந்த மாணவர் வாசித்த கவிதையில், மகாத்மா வன்முறையின்போது அமைதியாக வேடிக்கை பார்த்தார் என்று தெரிவித்து உள்ளார்.

கைத்தட்டிய பாஜக எம்.எல்.ஏ

கைத்தட்டிய பாஜக எம்.எல்.ஏ

இந்தியா - பாகிஸ்தான் தேச பிரிவினையின்போது ஏற்பட்ட நிகழ்வுகளை குறிப்பிட்டு மகாத்மா காந்தியை விமர்சிக்கும் வகையிலான கருத்துக்கள் மாணவர் வாசித்த கவிதையில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இதனை கேட்டவுடன் அங்கு விழாவில் பங்கேற்று இருந்த பாஜக எம்.எல்.ஏ. தினேஷ் ராய் முன்மம் கைத்தட்டி வரவேற்றது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

வெடித்த சர்ச்சை

வெடித்த சர்ச்சை

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. தேசத்தின் விடுதலைக்காக போராடிய நாட்டின் தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்திக்கு எதிராக பள்ளியில் மாணவனை கவிதை வாசிக்க வைப்பதா என்று பலரும் அதிருப்தி தெரிவித்ததுடன் பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர்.

கல்வித்துறை நோட்டீஸ்

கல்வித்துறை நோட்டீஸ்

அத்துடன் காந்திக்கு எதிரான கவிதையை பாஜக எம்.எல்.ஏ கைத்தட்டி பாராட்டியதையும் பலரும் விமர்சித்து அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், மகாத்மா காந்திக்கு எதிராக கவிதை வாசித்த மாணவரை வழிநடத்திய ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு பள்ளி முதல்வர் அறிக்கை வழங்க கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

 காங்கிரஸ் புகார்

காங்கிரஸ் புகார்

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியினர் மகாத்மா காந்திக்கு எதிராக மாணவனை கவிதை வாசிக்க வைத்த பள்ளி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் மனு வழங்கினர். இதற்கு பாஜகவே பொறுப்பு என தெரிவித்த அவர், மகாத்மா காந்தியை அவமதிக்க அவர்களின் சித்தாந்தம் குழந்தைகளுக்கு போதிப்பதாக காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜ்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.

பாஜக எம்.எல்.ஏ. விளக்கம்

பாஜக எம்.எல்.ஏ. விளக்கம்

இதற்கிடையே பள்ளிக் குழந்தைகள் தொடர்பான இந்த சம்பவத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று, கவிதைக்கு கைத்தட்டிய சியோனி தொகுதி பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் தினேஷ் ராய் தெரிவித்து உள்ளார். குழந்தைகளை அரசியலுக்காக பயன்படுத்தக் கூடாது எனவும் அவர் கூறி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+