ம.பி.யில் பாஜகவின் ஆட்சியை தீர்மானிக்கப் போகும் 28 தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேசத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவிதியை தீர்மானிக்கப் போகும் 28 தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Recommended Video

    Madhya Pradesh-ல் BJP-யின் நிலை என்ன ஆகும்? | Oneindia Tamil

    2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114; பாஜக 109 இடங்களில் வென்றிருந்தன. 2019 அக்டோபரில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதால் காங்கிரஸின் பலம் 115 ஆக அதிகரித்தது.

    MP bypolls result to be declare today

    2019 லோக்சபா தேர்தலில் பாஜக எம்.எல்.ஏ. ஜி.எஸ். தோமர் போட்டியிட்டு வென்றதால் பாஜகவின் பலம் 108 ஆக குறைந்தது. 2019 காங்கிரஸ் எம்.எல்.ஏ. பன்வாரி லால் சர்மா காலமானதால் காங்கிரஸ் பலம் மீண்டும் 114 ஆக குறைந்தது.

    இந்த ஆண்டு ஜனவரியில் பாஜக எம்.எல்.ஏ. அகர் மனோகர் காலமானதால் பாஜகவின் பலம் 107 ஆக குறைந்தது. கடந்த மார்ச் மாதம் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய அந்த கட்சியின் பலம் சட்டசபையில் 92 ஆனது.

    அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவால் சட்டசபையில் அக்கட்சியின் பலம் 87 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் ம.பி. சட்டசபையில் காங்கிரஸுக்கு 87; பாஜகவுக்கு 107; பகுஜன் சமாஜ்-2 சமாஜ்வாதி-1; சுயேட்சைகள் 4 பேர் உள்ளனர்.

    MP bypolls result to be declare today

    இந்நிலையில் கடந்த நவம்பர் 3-ல் 28 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. இடைத்தேர்தல் நடைபெற்ற 28 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பாஜகவின் தற்போதைய ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். அதேநேரத்தில் ஆட்சியை தக்க வைக்க குறைந்தபட்சம் 8 தொகுதிகளிலாவது பாஜக வெல்ல வேண்டும்.

    இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 21 இடங்களில் வென்றால் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, சுயேட்சைகள் ஆதரவுடன் மீண்டும் அக்கட்சி ஆட்சி அமைக்கவும் முயற்சிக்கலாம். இதனால் மத்திய பிரதேசத்தில் பெரும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் நிலவுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+