கடிதத்தில் பிழை.. முத்துக்கருப்பன் ராஜினாமாவை நிராகரித்தார் வெங்கையா
காவிரி விவகாரத்தில் அதிமுக எம்பி முத்துகருப்பன் இன்று ராஜினாமா செய்யவுள்ளார்.
Recommended Video

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தனது எம்பி பதவியை முத்துகருப்பன் ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அளித்த நிலையில் அவர் அதை ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த அவகாசம் கடந்த 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மத்திய அரசு இதுவரை வாய்திறக்காமல் இருந்தது. இது தமிழக விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் அதிமுக ராஜ்யசபா எம்பியான முத்துக்கருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கடந்த 30-ஆம் தேதி டெல்லியில் அறிவித்தார்.

ராஜினாமா கடிதம்
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மக்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காத போது எனக்கு எதற்கு பதவி என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ராஜ்யசபா தலைவரான துணை குடியரசு தலைவரிடம் அடுத்த வாரம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்கவுள்ளதாகவும் முத்துக்கருப்பன் தெரிவித்திருந்தார்.

கேட்க மாட்டேன்
முதல்வரும், துணை முதல்வரும் தனக்கு சகோதரர்கள் போன்றவர்களி என்றாலும் ராஜினாமா விவகாரத்தில் நான் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

முத்துகருப்பன் ராஜினாமா
டெல்லியில் மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணை தலைவருமான வெங்கய்ய நாயுடுவுக்கு முத்துகருப்பன் ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். பொதுவாக ராஜினாமா செய்வது என்பது உடல் நல பாதிப்பு, தனிப்பட்ட காரணங்களுக்காக இருந்தால் மட்டுமே ஏற்கப்படும். ஆனால் அரசியல் காரணங்களுக்காக ராஜினாமா கடிதம் ஏற்கப்படாது என்பது மரபு. எனவே முத்துகருப்பனின் ராஜினாமா கடிதத்தை வெங்கையா நாயுடு ஏற்கவில்லை.

ராஜினாமா இல்லை
எனினும் ராஜினாமா கடிதத்தை ஏற்கும் வகையில் வலுவான காரணங்களை கூறி மறுபடியும் ராஜினாமா செய்ய வாய்ப்புகள் உள்ளன. ராஜினாமா கடிதம் ஏற்க மறுக்கப்பட்டது குறித்து முத்துகருப்பன் கூறுகையில், காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 9-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரவிருப்பதால் ராஜினாமா செய்ய வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி என்னை தொடர்பு கொண்டு கூறினார். அதனால் நான் மீண்டும் ராஜினாமா செய்யப் போவதில்லை என்று தற்போது திடீர் பல்டி அடித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications