"இந்தியா கூட்டணி" போபால் கூட்டம் ரத்து- திமுக 'உதயநிதி'காரணம்: கோர்த்துவிடும் பாஜக 'சவுகான்'
போபால்: "இந்தியா" கூட்டணியின் போபால் பொதுக் கூட்டத்துக்கு காரணம் சனாதனத்தை ஒழிப்போம் என்ற பேச்சுதான் என மூத்த பாஜக தலைவரும் மத்திய பிரதேச முதல்வருமான சிவராஜ்சிங் சவுகான் கூறியுள்ளார்.
டெல்லியில் அண்மையில் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் வியூகம் வகுக்கும் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில் "இந்தியா" கூட்டணியின் முதலாவது பொதுக் கூட்டம் போபாலில் அக்டோபர் 2-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் போபாலில் செய்தியாளர்களை சந்தித்த ம.பி. முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான கமல்நாத், போபால் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸின் கமல்நாத், ரந்தீப்சிங் சுர்ஜிவாலா ஆகியோர் இந்தியாவில் சனாதன தர்மம் என்பது எப்போதும் நிலைத்து நிற்கும்; இந்தியாவில் மக்களே இல்லாமல் போனாலும் சனாதனம் உயிர்ப்புடன் நிற்கும் என்றனர்.
இதனிடையே ம.பி முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கூறியிருப்பதாவது: மத்திய பிரதேச மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். சனாதன தர்மத்தை அவமதித்துவிட்டனர். சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டுப் பேசியதை மத்திய பிரதேச மக்கள் சகித்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இதனை இந்தியா கூட்டணி முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மத்திய பிரதேச மக்களின் கோபத்தைக் கண்டு 'இந்தியா' கூட்டணி பயந்துவிட்டது. அதனால்தான் போபால் பொதுக் கூட்டத்தையே ரத்து செய்துவிட்டனர். இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.
ம.பி.யில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜகவின் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியதாவது: இந்தியா கூட்டணி உருவான பின்னர் சனாதன தர்ம எதிர்ப்பு சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு நான் சொல்வது,, திமுகவுடனான கூட்டணி உறவை முறித்துக் கொள்ளுங்கள். அதைவிட்டுவிட்டு, திமுகவின் கருத்து சுதந்திரம் என்றெல்லாம் பேசாதீர்கள். இந்தியா என பெயர் வைத்துவிட்டதாலே இந்தியாவில் வெற்றி பெறுவோம் என பேசுகின்றனர். மகாத்மா என பெயர் வைத்துவிட்டால் மகாத்மா காந்தியாக முடியுமா?. இவ்வாறு ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications