ம.பி. முதல்வர் கார் செல்லும் வரை காத்திருந்ததில் சாலை விபத்தில் சிக்கிய மாணவர் பரிதாப பலி
போபால்: மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் வாகனம் செல்லும் வரை காத்திருந்ததில் விபத்தில் படுகாயம் அடைந்த மாணவர் பலியானார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த கோகுல் பிரசாத் சோனியா என்பவரின் மகன் விகாஸ் பிரசாத் சோனியா(22). கல்லூரி மாணவர். அவர் செவ்வாய்க்கிழமை காலை விதான் சவுதா அருகே செல்கையில் பேருந்து அவர் மீது மோதியது.

இதில் விகாஸுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருப்பதால் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் கார் கடந்து செல்லும் நேரமாக இருந்ததால் போலீசார் நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த விகாஸை தூக்கி சாலையோரம் படுக்க வைத்துவிட்டு அவர்கள் வேலையை கவனிக்க சென்றுவிட்டனர்.
விகாஸ் 45 நிமிடங்கள் கவனிப்பார் இன்றி சாலையோரம் வலியில் துடித்துள்ளார். முதல்வரின் வாகனம் சென்ற பிறகு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட விகாஸை 20 நிமிடங்கள் வரை ஒரு மருத்துவர் கூட கண்டுகொள்ளவில்லை.
அதன் பிறகு அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் விகாஸ் இறந்துவிட்டார். நான் மக்களின் சேவகன், விவசாயி மகன் என்று கூறிக் கொள்பவர் சிவராஜ் சிங் சவுகான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications