காமம் தலைக்கேறிய மனைவி.. பொங்கியெழுந்த கணவன்.. கள்ள காதலனை கைவிட மறுத்ததால் ஊருக்கு நடுவில்.. கொடுமை
துரோகம் செய்த மனைவிக்கு நூதன தண்டனை தந்துள்ளார் கணவன்
போபால்: காமம் தலைக்கேறிய மனைவியை வைத்து கொண்டு, கணவனால் வெளியே தலைகாட்ட முடியவில்லை.. கள்ளக்காதலனை கடைசிவரை கைவிட மறுத்துவிட்டார் மனைவி.. அதனால் கிராம மக்கள் முன்னிலையிலேயே மனைவிக்கு நூதன தண்டனை தரப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
வன்முறைகளின் உச்சமாக வடமாநிலங்கள் மாறி வருகின்றன.. குறிப்பாக கல்வி அறிவு இல்லாத கிராமங்களில் கற்பழிப்புகள், வன்முறைகள், காட்டுமிராண்டித்தமான செயல்கள் போன்றவை அரங்கேறியும் வருகின்றன.

போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என மக்களுக்காக இருந்தாலும், இன்னமும்கூட சில கிராமங்களில் கிராம பஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டு, அதிலேயே குற்றங்களுக்கு தண்டனையும் தரப்பட்டு வருகின்றன.. இதில் எல்லை மீறும் அநியாயங்களும், அக்கிரமங்களும் நடக்கின்றன.. அப்படி ஒரு சம்பவம்தான் இது!
மத்திய பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில் சாப்ரி ரன்வாஸ் என்ற கிராமம் உள்ளது.. பழங்குடியின மக்கள் இங்கு அதிகமாக வசித்து வருகிறார்கள்.. இங்குள்ள ஒரு பெண்ணுக்கு இன்னொரு ஆணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.. இவர்களின் காதல் விவகாரம் கணவனுக்கு தெரியவந்துள்ளது.
அதனால், மனைவியை அவர் கண்டித்தார்.. ஆனால் காதலனை விட முடியாது என்று மனைவி கூறியுள்ளதாக தெரிகிறது.. இது தொடர்பாக இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு விஷயம் பஞ்சாயத்துக்கு வந்தது.. கணவனுக்கு துரோகம் செய்த அந்த பெண்ணுக்கு ஊர் மக்கள் தண்டனை தர நினைத்தார்கள்.. அதற்காக ஊருக்கு நடுவில் எல்லாரும் ஒன்று கூடினார்கள்.. கணவனை அந்த பெண் தோளில் உட்கார வைத்து ஊரையே சுற்றி வர வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டது.
இதையடுத்து, ஊர்ஜனங்கள் முன்பு, கணவனை தோளில் ஏற்றினார் அந்த பெண்.. கணவனும் ஏறி உட்கார்ந்து கொண்டார்.. ஆனால், அந்த பெண்ணால், கணவனை தூக்க முடியவில்லை.. அதனால் திணறினார்.. இதை பார்த்த ஊர் மக்கள், கெட்ட கெட்ட வார்த்தைகளில் அந்த பெண்ணை திட்டினர்.. நடக்க முடியாமல் நடந்தபோது, அங்கிருந்த கம்பு எடுத்து வந்து, அந்த பெண்ணை அடித்தனர்.
இந்த சம்பவத்தை அவர்களே செல்போனில் வீடியோவாகவும் எடுத்து சோஷியல் மீடியாவில் போட்டுள்ளனர்.. இந்த கொடுமையான வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவனை கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications