அப்துல் கலாம் வாழ்க்கையை போன்ற வெற்றி சரித்திரம் வேறு கிடையாது: டோணி இரங்கல்
Subscribe to Oneindia Tamil
ராஞ்சி: நாட்டுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கியவர் அப்துல் கலாம் என்று இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோணி தெரிவித்துள்ளார்.

அப்துல் கலாம் மறைவு குறித்து டோணி கூறியதாவது: கலாம் மறைவு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. ஏழ்மையான குடும்பத்தின் பின்னணியில் இருந்து வந்து, நாட்டின் முப்படைகளுக்கும் தலைவராக (குடியரசு தலைவர்) உயர்ந்தவர். கலாம் வாழ்க்கையை போன்ற ஒரு சிறந்த வெற்றி சரித்திரம் எதுவும் இருக்க முடியாது.
இளைஞர்களுக்கு ஒரு முன் மாதிரியாக விளங்குபவர் அப்துல் கலாம். அவரை சந்திக்கவும், உரையாடவும் வாய்ப்பு கிடைத்ததவர்கள் எல்லோருமே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்தான். எப்போதுமே கடின உழைப்பை மட்டுமே நம்பியவர் கலாம். இவ்வாறு டோணி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications