மேகாலயாவில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு.. முகுல் சங்மா உள்பட 12 எம்எல்ஏக்கள் திரிணமூலில் ஐக்கியம்
ஷில்லாங்: மேகாலயா மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் முகுல் சங்மா தலைமையில் 12 எம்எல்ஏக்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். இதனால் அக்கட்சிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, திரிபுரா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கும், நவ்ஜோத் சித்துவுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் அமரீந்தர் அக்கட்சியிலிருந்து விலகி புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
அது போல் கோவாவில் முன்னாள் முதல்வர் லூய்சின்ஹோ பலேரோ காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அவர் அந்த மாநிலத்திலிருந்து ராஜ்யசபைக்கு செல்ல வேட்பாளராகவும் திரிணமூல் சார்பில் அறிவிக்கப்பட்டுவிட்டார்.

கட்சி வலிமை
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி வலிமையாக இருந்து வந்த மேகாலயாவில் அக்கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வரும் மேகாலயா சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான முகுல் சங்மா தலைமையில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

பலம் என்ன
மேகாலயாவில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அங்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 17 எம்எல்ஏக்கள் உள்ளனர். அக்கட்சி எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. அதன் தலைவர் முகுல் சங்மா. இந்த நிலையில் 17 பேரில் 12 பேர் ஒட்டுமொத்தமாக திரிணமூல் காங்கிரஸில் இணைந்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வின்சென்ட் எச் பலா
மேகாலயா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வின்சென்ட் எச் பலாவுக்கும் முகுல் சங்மாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. அது போல் அக்கட்சியின் மாநில தலைவராக பலாவை நியமிப்பது குறித்து தன்னிடம் கட்சி தலைமை ஆலோசிக்கவில்லை என முகுல் சங்மா குற்றம்சாட்டுகிறார். இதிலிருந்தே சங்மா எப்போது வேண்டுமானாலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தாவுவார் என யூகிக்கப்பட்டது.

சங்மாவிடம் பேச்சுவார்த்தை
கடந்த சில நாட்களுக்கு முன்பு திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு சங்மாவிடம் பிரசாந்த் கிஷோரின் குழுவினர் பேச்சுவார்த்தையும் அதை அவர் ஏற்கவில்லை என தெரிகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்ற கூட்டத்தில் கூட சங்மா கூறுகையில் கட்சியில் சில பிரச்சினைகளை தீர்க்க வேண்டியுள்ளது. அதை நிச்சயம் நான் செய்வேன் என கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது இவர் திரிணமூல் காங்கிரஸில் இணைந்துள்ளார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications