மும்பை தாக்குதல்: நாடு கடத்தப்பட்ட தஹாவூர் ராணா டெல்லியில்.. காவலில் எடுத்து விசாரிக்கிறது என்.ஐ.ஏ.!
டெல்லி: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட, மும்பை தாக்குதல் வழக்கின் குற்றவாளியான பயங்கரவாதி தஹாவூர் ராணாவை அழைத்து வந்த விமானம் டெல்லியில் தரையிறங்கியது. டெல்லியில் தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ., ராணாவை கைது செய்தது. இதையடுத்து டெல்லி சிறையில் ராணா அடைக்கப்பட்டார். இதன் பின்னர் ராணாவை, என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.

175 பேரை பலி கொண்ட 2008-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகரில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் குற்றவாளிகளில் ஒருவரான தஹாவூர் ராணா, அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தஹாவூர் ராணை இந்தியாவிடம் ஒப்படைக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. அண்மையில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப்பிடமும் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா நீதிமன்ற உத்தரவுப்படி ராணா, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தபப்ட்டார். இதனையடுத்து டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் ராணா விவகாரம் தொடர்பாக நேற்று தீவிர ஆலோசனை நடத்தி இருந்தனர்.
இந்த நிலையில் தஹாவூர் ராணாவை அழைத்து வந்த விமானம் டெல்லியை வந்தடைந்தது. டெல்லி விமான நிலையத்தில் தஹாவூர் ராணாவை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து டெல்லி திஹார் சிறையில் ராணா அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட ராணாவை, என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.
The National Investigation Agency (NIA) on Thursday evening formally arrested Tahawwur Hussain Rana, the key conspirator in the deadly 26/11 Mumbai terror attacks, immediately after his arrival at IGIA, New Delhi, following his successful extradition from the United States.… pic.twitter.com/Tg3GBrjbo5
— ANI (@ANI) April 10, 2025
என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்கும் போது, மும்பை தாக்குதல் சதித் திட்டத்தை தீட்டியது யார்? லஷ்கர் இ தொய்பாவுக்கு பாகிஸ்தான் அரசு எப்படி உதவி செய்தது? மும்பை தாக்குதல் சம்பவத்தில் இன்னமும் பிடிபடாத ப்யங்கரவாதிகள் யார்? என்பது குறித்த பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பு.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications