நீங்க மும்பையில் வசிக்கிறீங்களா.. உங்க ஊரோட டெம்பரேச்சர் 2.4 டிகிரி கூடுதலாயிருச்சு தெரியுமா?
மும்பை: மும்பை நகரின் வெப்ப நிலை கடந்த 124 வருடங்களில் 2.4 டிகிரி செல்சியல் கூடுதலாகியிருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு இருந்த ஆண்டுகளை விட அதாவது கடந்த 134 ஆண்டுகளில் 2015ம் ஆண்டுதான் அதிக வெப்பமான வருடம் என்ற பெயரை எடுத்துள்ளது. இந்த நிலையில் கடந்த 124 ஆண்டுகளில் மும்பை, டெல்லி மற்றும் பிற இந்திய நகரங்கள் அதிக வெப்ப நிலையை சந்தித்து வருவதாக இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் நாசா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாக இந்தியாஸ்பெண்ட்ஸ் ஆய்வுக் கட்டுரை விவரிக்கிறது.

2.4 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பு...
கடந்த 1891ம் ஆண்டிலிருந்து மும்பையின் வருடாந்திர வெப்பநிலையானது 2.4 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாம்.

டெல்லி...
டெல்லியின் சராசரி வருடாந்திர வெப்ப நிலையானது கடந்த 1930ம் ஆண்டுக்குப் பிறகு 0.3 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.

இந்திய அளவில்...
இந்தியாவைப் பொருத்தவரை கடந்த 200 ஆண்டுகளில் 2.2 டிகிரி அளவில் வெப்பநிலை உயர்ந்துள்ளதாம்.

6300 வானிலை மையங்கள்...
உலகம் முழுவதும் உள்ள 6300 வானிலை மையங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்பைடயில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது நாசா.

21ம் நூற்றாண்டில் தான்...
2000ம் ஆண்டுக்குப் பிறகுதான் அதிக அளவிலான வெப்பநிலையை உலகம் சந்தித்துள்ளது. உலக அளவில் வெப்பமயமாக்கல் அதிகரித்திருப்பதையே இது காட்டுகிறது.

ஸ்பெயின்...
பின்லாந்தும், ஸ்பெயின் நாடும்தான் அதிக அளவிலான வெப்ப நிலையை சந்தித்துள்ளன. அர்ஜென்டினா இதற்கு அடுத்த இடத்தில் வருகிறது.

எல் நினோ...
எல் நினோவும் கூட வெப்ப நிலை அதிகரிக்க ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த எல்நினோ காரணமாகவே கடந்த ஆண்டு இந்தியாவின் வட பகுதிகளில் அதிக அளவிலான வெப்ப நிலை நீடித்தது. பருவ மழையும் அங்கு பொய்த்தது.

வறட்சி, வெள்ளம், காட்டூத்தீ...
வெப்ப நிலை அதிகரிப்பால் ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவில் வெள்ளம் ஏற்படும் என்றும் ஆப்பிரிக்காவில் பஞ்சம் மேலும் அதிகரிக்கும் என்றும் ஆசியாவில் வறட்சி நிலவும் என்றும் வட அமெரிக்காவில் காட்டுத் தீ அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications