ஃபேஸ்புக் தோழியை மார்பிங் போட்டோவை காட்டி பணம் கேட்டு மிரட்டிய பி.இ. மாணவர் கைது
மும்பை: மகாராஷ்டிராவில் புகைப்படத்தை ஆபாசமாக இருப்பது போன்று மார்பிங் செய்து ஃபேஸ்புக் தோழியை மிரட்டிய என்ஜினியரிங் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் ரைகாட் மாவட்டம் கோபோலி அருகே உள்ள கால்பூரைச் சேர்ந்தவர் பிரத்மேஷ் சலுன்கே(20). அவர் நவி மும்பையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் மூன்றாவது ஆண்டு எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் படித்து வருகிறார். அவர் 15 வயது சிறுமிக்கு ஃபேஸ்புக்கில் பலமுறை பிரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்துள்ளார்.

அந்த சிறுமி அவரின் ரெக்வெஸ்ட்டை ஏற்காததால் பிரத்மேஷ் சிறுமியின் ஆண் நண்பர்கள் சிலருடன் ஃபேஸ்புக்கில் நண்பர் ஆனார். அதன் பிறகு சிறுமிக்கு மீண்டும் பிரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்தார். சிறுமியும் கடந்த மாதம் அவரது ரெக்வெஸ்ட்டை ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து பிரத்மேஷ் சிறுமியுடன் சாட் செய்துள்ளார். திடீர் என்று சிறுமியும் அவரும் நெருக்கமாக இருப்பது போன்று மார்பிங் செய்யப்பட்ட ஆபாசப்படத்தை அனுப்பியுள்ளார். ரூ.7 ஆயிரம் கொடுக்கவில்லை என்றால் அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என பிரத்மேஷ் மிரட்டினார்.
சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் சார்கோப் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் ஒரு பெண் பெயரில் ஃபேஸ்புக்கில் போலி கணக்கு துவங்கி பிரத்மேஷுக்கு பிரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்தனர். அவரும் உடனே ஒப்புக் கொண்டார். அவருடன் பெண் பெயரில் சாட் செய்த போலீசார் நைசாகப் பேசி அவரின் செல்போன் எண்ணை வாங்கினார்.
அவரின் செல்போன் எண் மற்றும் ஐ.பி. முகவரியை வைத்து போலீசார் பிரத்மேஷை கால்பூரில் வைத்து கடந்த திங்கட்கிழமை கைது செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications