நடன பார்களுக்கு புதிய சட்டம் மூலம் தடை விதிக்க மகராஷ்டிரா முடிவு
மும்பை: மகராஷ்டிராவில் நடன பார்களுக்கு புதிய சட்டம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
இச்சட்டம் மூலம் நாட்டின் நிதித்துறை தலைநகரான மும்பையில் நடன பார்கள் நடத்த தடை விதிப்பதுடன் அம்மாநிலம் முழுவதும் இது பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

நடன பார்கள்
மகராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் பெண்கள் நடனமாடும் பார்கள் செயல்பட்டு வந்தன. குறிப்பாக மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களிலும் மற்ற முக்கிய நடன அரங்கங்களிலும் இது போன்ற நடனங்கள் நடந்தன. இத்தொழிலில் 700 நிறுவனங்களும் 75000 பெண்களும் ஈடுபட்டு வந்தனர்.

நடனபார்களுக்கு தடை
இதற்கு எதிராக மும்பை போலீசார் கடந்த 2005-ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த உயர் நிதிமன்றம் நடன பார்கள் நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து 7 ஆண்டுகள் மும்பையில் பெண்கள் பார்களில் நடனமாடவில்லை.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
மகாராஷ்டிரா அரசு நடன நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்த பிறகு சில நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

பார்கள் திறக்க அனுமதி
வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் மீண்டும் நடன பார்களை திறக்க உத்தரவிட்டிருந்தது. இதுபோல் மராட்டிய மாநிலத்தின் மற்ற முக்கிய நகரங்களிலும் மதுபான பார்களில் பெண்கள் நடனமாடலாம் என்று அனுமதி வழங்கினர்.

நட்சத்திர நடன பார்கள்
கடந்த 2005 ஆம் ஆண்டு நடன நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டபோது எலைட் பிரிவில் நட்சத்திர ஓட்டல்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் மும்பை உயர்நீதிமன்றம் இது அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளித்தது.

அரசு புதிய சட்டம்
மகாராஷ்டிரா அரசு நடன பார்களுக்கு தடை விதித்ததை உச்சநீதிமன்றம் ரத்து செய்த ஓராண்டுக்கு பின் மீண்டும் அம்மாநில அரசு புதிய சட்டம் மூலம் அதற்கு தடை விதித்துள்ளது. இந்த தடை மூன்று மற்றும் ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடன பெண்களின் வாழ்வாதாரம்
அரசு தடை விதித்தது சரி. ஆனால் அதே சமயம் அத்தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு மறுவாழ்வுக்கான வசதியை தரவேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications