மேகி நூடுல்சுக்கு விதித்த தடையை நீக்க மும்பை உயர்நீதிமன்றம் மறுப்பு!!!
மும்பை: மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தடை விதித்ததை எதிர்த்து, நெஸ்ட்லே நிறுவனம் தொடர்ந்த வழக்கில் மேகி நூடுல்சுக்கு தடை விதித்து வெளியிடப்பட்ட ஆணையை நீக்க உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
மேகி நூடுல்சில் காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் அதிகளவில் சேர்க்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்கள் மீது பல்வேறு மாநிலங்கள் ஆய்வக சோதனை மேற்கொண்டன.
அப்போது அவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் அதிகம் சேர்க்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகள் மேகி நூடுல்சுக்கு விதித்த தடையை தொடர்ந்து, மகாராஷ்ட்ரா அரசும் தடை விதித்தது.
இந்த நிலையில் நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் 9 வித மேகி நூடுல்சுகளையும் 'பாதுகாப்பற்றவை' மற்றும் 'மனிதர்களுக்கு தீங்குவிளைவிப்பவை' என்று அறிவித்து மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் நாடு முழுவதும் தடை செய்து உத்தரவு பிறப்பித்தது.
அதை எதிர்த்து நெஸ்லே இந்தியா நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தது.
அதில் இந்த உத்தரவு உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணைய சட்டத்தின் 34-வது பிரிவுக்கு முரணானது என்றும், தன்னிச்சையானது எனவும் கூறப்பட்டிருந்தது. எனவே, மேகி நூடுல்ஸ் மீதான தடையை மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் திரும்ப பெற உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வெள்ளிக் கிழமையும் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் நெஸ்ட்லே இந்தியாவின் கோரிக்கையை ஏற்று மேகி நூடுல்சுக்கு விதித்த தடையை ரத்து செய்ய மும்பை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக இன்னும் இருவாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் மற்றும் மகாராஷ்ர மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications