டெக்கான் க்வீன் ரயிலில் தீ - மும்பையிலிருந்து தாமதமாக புறப்பட்ட ரயில்கள்

இந்த ரயில் நிலையத்திலிருந்து தினமும் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், புனே செல்லும் டெக்கான் குயின் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை 5.10 மணிக்கு சிஎஸ்டி ரெயில் நிலையத்தில் பயணிகளுடன் புறப்படுவதற்கு தயாராகி கொண்டிருந்தது.
நேற்று மாலை 5.03 மணியளவில் திடீரென ரயிலின் கடைசி பெட்டிக்கு முந்தைய பெட்டியில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் அந்த பெட்டி தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் அந்த பெட்டியில் இருந்து அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓடினார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து மேலே செல்லும் ஓவர்ஹெட் மின்கம்பியில் மின்விநியோகம் உடனடியாக துண்டிக்கப்பட்டது.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரயில் பெட்டியில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதைத் தொடர்ந்து சேதமடைந்த ரயில் பெட்டியை ரயில்வே ஊழியர்கள் தனியாக பிரித்தனர்.
இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் மாலை 5.43 மணியளவில் 9 ஆம் எண் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த கோலாப்பூர் சயாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ் 5 பெட்டியிலும் மாலை 6.10 மணிக்கு 15 ஆம் எண் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ஹவுரா மெயில் ரயிலின் ஒரு பெட்டியிலும் இருந்து கரும்புகை கிளம்பி தீப்பிடிக்க தொடங்கியது.
உடனடியாக தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு 2 ரயில் பெட்டியிலும் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். பின்னர் தீப்பிடித்த 2 பெட்டிகளும் தனியாக பிரிக்கப்பட்டன.
சிஎஸ்டி ரயில் நிலையத்தில் அடுத்தடுத்து ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்ட இந்த சம்பவத்தால் பயணிகள் பீதி அடைந்தனர். பயணிகள் அனைவரும் சுதாரித்துக் கொண்டு கீழே இறங்கியதால் உயிர் தப்பினார்கள். இந்த தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து 3 ரயில்களும் வழக்கமான நேரத்தை விட தாமதமாக புறப்பட்டு சென்றன.
புனே செல்லும் டெக்கான் குயின் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக மாலை 6.14 மணிக்கு புறப்பட்டு சென்றது. 5.50 மணிக்கு புறப்பட வேண்டிய கோலாப்பூர் சயாத்ரி எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு சென்றது.
தற்போது சென்னை ரயில்நிலைய குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ள நிலையில் இதுவும் தீவிரவாதிகளின் சதியாக என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகின்றது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications