நிர்வாண செல்பி கேட்டு நச்சரித்த மாப்பிள்ளை... திருமணத்தை நிறுத்தினார் புதுப்பெண்!
மும்பை: மும்பையில் வருங்கால கணவர் நிர்வாண செல்பி கேட்டதால், ஆத்திரமடைந்த கல்யாணப்பெண் கோபத்தில் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தினார்.
மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், தானேயில் கால்செண்டரில் பணிபுரிந்து வரும் ஜிதேந்திரா என்ற 33 வயது இளைஞருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து இருவரும் கல்யாணக் கனவுகளில் மிதக்கத் தொடங்கினர். தினமும் மணிக்கணக்கில் போனில் பேசி வந்துள்ளனர். அதோடு தங்களது புகைப்படங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.

இந்நிலையில், ஜிதேந்திராவுக்கு திடீரென விபரீத ஆசை ஒன்று வந்துள்ளது. அதாவது தனது வருங்கால மனைவியை நிர்வாணமாக பார்க்க வேண்டும் என்பது தான் அது. தனது ஆசையை அவர் தனது வருங்கால மனைவியிடமும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். ஆனால், மாப்பிள்ளை விடுவதாக இல்லை. தொடர்ந்து ‘நிர்வாண செல்பி' கேட்டு வருங்கால மனைவியை அவர் நச்சரித்து வந்துள்ளார்.
அதோடு, ரூ. 3 லட்சம் ரொக்கப் பணமும் வரதட்சணையாக அவர் கேட்டுள்ளார். தனது விருப்பப் படி நிர்வாண செல்பி மற்றும் வரதட்சணை தராவிட்டால், திருமணத்தை நிறுத்தி விடப் போவதாகவும் அவர் மிரட்டி வந்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த அப்பெண், ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து நடக்க இருந்த திருமணத்தை தானே தடுத்து நிறுத்தினார்.
மேலும் வக்கிர புத்தியுடன் நடந்து கொண்டதாக மாப்பிள்ளை மீது அவர் போலீசிலும் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications