வீட்டை விட்டு வெளியே வரவே வராதீங்க... மும்பைவாசிகளை எச்சரிக்கும் சமூகவலைதளவாசிகள்
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மும்பை பெருநகரமே வெள்ளக்காடாகியுள்ளது. இதனால் நகரவாசிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். சமூக வலைதளங்களில் எச்சரிக்கை பதிவுகள் அதிகரித்துள்ளன.
மும்பை: மும்பையில் பெய்து வரும் சூறாவளி மழையால் பெருநகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் சாலை, ரயில், விமானப்போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.
மருத்துவமனைக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. வெள்ளம், சாலைகளில் மரங்களில் சாய்ந்துள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டும் யாராலும் வீடு சென்று சேரமுடியவில்லை.
நிலைமை மோசமாக இருப்பதால் அவசியம் ஏற்பட்டால் தவிர வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என மும்பை பெருநகராட்சி எச்சரித்துள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பதிவிட்டுள்ளனர்.
|
பழைய சோகம் திரும்புது
2005ஆம் ஆண்டு மும்பையை பாதித்த பெரு வெள்ளம் மீண்டும் தாக்கியுள்ளது. தெருவில் இறங்க வேண்டாம். அதை விட அலுவலகத்தில் தங்கியிருப்பதே பாதுகாப்பு என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
பாலத்தில் பயணம் பாதுகாப்பு
தாதர் பகுதியில் உள்ள காந்தி மார்க்கெட் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. பாதுகாப்பான பயணத்திற்கு பாலத்தில் செல்லுங்கள் என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
மூழ்கிய மருத்துவமனை
மழையால் பெருகிய வெள்ளம் மிகப்பெரிய மருத்துவமனைக்குள் புகுந்துள்ளது. இதனால் நோயாளிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனை வீடியோவாக ஒருவர் பதிவிட்டுள்ளார்.
|
முறிந்து விழும் மரம்
மும்பையில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி வருவதால் மரங்கள் பேயாட்டம் போட்டு வருகின்றன. மிகப்பெரிய கட்டிடத்தில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுவதை படம் பிடித்து டுவிட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
|
நிலைமை ரொம்ப மோசம்
கிரேட்டர் மும்பையை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்களே ரொம்ப ஜாக்கிரதை என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications