காதலுக்கு இடையில் வந்த மதம்.. வாலிபரின் கழுத்தை அறுத்து கொன்ற பெண் குடும்பம்.. டெல்லியில் பயங்கரம்
டெல்லியில் இந்து முஸ்லீம் காதல் பிரச்சனை காரணமாக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
டெல்லி: டெல்லியில் இந்து முஸ்லீம் காதல் பிரச்சனை காரணமாக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த முஸ்லீம் பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த நபர்கள் இந்து குடும்பத்தை சேர்ந்த அங்கித் சக்சேனாவை கொடூரமாக கொலை செய்து இருக்கிறார்கள். அவர்கள் வசிக்கும் காலணியில் எல்லோருக்கும் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.
இதனால் அங்கு கலவரம் வெடிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. இதுகுறித்து நெஞ்சை உறைய வைக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்து முஸ்லீம் காதல்
அங்கித் சக்சேனாவும் அந்த முஸ்லீம் பெண்ணும் கடந்த 8 வருடமாக காதலித்து வந்துள்ளனர். பள்ளி காலத்தில் இருந்து இவர்கள் காதலித்துள்ளனர். இவர்கள் காதல் விஷயம் இரு குடும்பத்தை தவிர மற்ற அனைவருக்கும் தெரிந்து இருக்கிறது. இவர்கள் ஒரே காலணியில் வசித்து வந்துள்ளனர்.

திருமணம்
இந்த நிலையில் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு இந்த விஷயம் தெரிந்துள்ளது. இதனால் அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் பிரச்சனை செய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணிற்கு திருமணம் செய்யவும் முடிவெடுத்து இருக்கிறார்கள்.

திட்டம்
இந்த நிலையில் அந்த பெண் அங்கித்துடன் ஓடிப்போக திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக தன் குடும்பத்தாரை வீட்டிற்குள் பூட்டி வைத்துவிட்டு டெல்லி ரயில் நிலையத்திற்கு ஓடிப்போக முடிவெடுத்துள்ளார். ஆனால் அந்த குடும்பம் கடைசி நேரத்தில் பூட்டை உடைத்து தப்பித்து இருக்கிறது.

கொடூரமாக கொலை
வெளியே வந்த பெண்ணின் குடும்பம் அந்த பெண்ணை அடித்து உள்ளது. அதே காலனியில் வசித்து வரும் அங்கித்தின் அம்மாவையும் தாக்கியுள்ளனர். இதை தடுக்க வந்த அங்கித்தை கழுத்தை அறுத்து எல்லோர் முன்னிலையிலும் கொலை செய்துள்ளனர்.

பாதுகாப்பு
இதனால் அங்கு கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. அங்கு போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. பெண்ணின் குடும்பத்தார் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications