15 வருடங்களாக தினமும் கோசாலை பசுக்களுக்கு சப்பாத்தி சேகரிக்கும் 60 வயது இஸ்லாமியர்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இஸ்லாமியர் ஒருவர் கடந்த 15 ஆண்டுகளாக மக்களிடம் சப்பாத்தி சேகரித்து அவற்றை பசுக்களுக்கு வழங்கி வருவதை சேவையாகச் செய்து வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் நகரில் வசித்து வருகிறார் ஹாஜி மெஹ்ருதீன் (60). இவர் தினமும் காலை 6 மணிக்கு ஒரு தள்ளுவண்டியில் நான்கு கோணிப்பைகளுடன் கிளம்பி விடுகிறார். வீடு வீடாகச் சென்று சப்பாத்திக்களை சேகரிப்பது அவரது பணி. இவ்வாறு மதியம் 1 மணி வரை அவர் சப்பாத்தி சேகரிக்கிறார்.

பின்னர் அந்த சப்பாத்திக்களை அங்குள்ள கோசாலையில் உள்ள பசுக்களுக்கு உணவாகத் தருகிறார். இந்தச் சேவையை இவர் கடந்த 15 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார்.
ஜெய்சால்மர் முழுவதும் ஒரே நாளில் சப்பாத்தி சேகரிப்பது கடினம் என்பதால், வாரத்தின் ஒவ் வொரு நாளும் ஒரு பகுதி என பிரித்துக்கொண்டு நகரம் முழுவதும் செல்கிறார் மெஹ்ருதீன்.
பசுக்களுக்கு உணவளிப்பதன் மூலம் தனக்கு மன அமைதியும், மகிழ்ச்சியும் கிட்டுவதாக கூறுகிறார் அவர். மேலும், ‘வன்முறையில் ஈடுபடுமாறு எந்த மதமும் போதிக்கவில்லை. அமைதி, ஒற்றுமை, நம்பிக்கை, சகோதரத்துவம் ஆகியவற்றையே ஒவ்வொரு மதமும் போதிக்கிறது" என்கிறார் மெஹ்ருதீன்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications