தண்டவாளத்தில் தவறி விழுந்த பெண்! வேகமாக வந்த ரயில்! பாய்ந்து காப்பாற்றிய முஸ்லீம் வாலிபர்.. வீடியோ
போபால்: ரயில் தண்டவாளத்தில் விழுந்த பெண் ஒருவரை இஸ்லாமியர் ஒருவர் துணிச்சலாக காப்பாற்றிய சம்பவம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
மத்திய பிரதேச மாநிலம் போபால் ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு போபால் அருகே உள்ள பர்கேதி ரயில் நிலையத்தில் இரவு 8 மணிக்கு முகமது மெகபூப் என்ற நபர் ரயிலுக்கு காத்துகொண்டு இருந்தார்.
37 வயதாகும் இவர் அந்த பகுதியில் தச்சராக பணி செய்து வருகிறார். இந்த நிலையில் முகமது மெகபூப் ரயிலுக்கு காத்திருக்கும் போது எதிர் பிளாட் பார்மில் இருந்து பெண் ஒருவர் ரயிலுக்கு காத்து இருந்தார்.

பிளாட்பாரம்
26 வயதாகும் அந்த பெண் முதுகில் ஒரு பெரிய பேக் மாட்டி இருந்ததாக கூறப்படுகிறது. எதிர் பிளாட் பார்மில் இருந்த அந்த பெண் ரயில் ஏறுவதற்கு இந்த பிளாட்பார்ம் வர வேண்டும். இந்த நிலையில் நடைமேடை வழியாக தண்டவாளத்தை கடக்காமல், விதியை மீறி தண்டவாளம் வழியாக நடந்து அந்த பெண் இந்த பிளாட் பார்மிற்கு வர முயன்றுள்ளார்.

போபால் பெண்
அந்த பெண் சரியாக தண்டவாளத்தை கடக்க ஓடி வரும் நேரத்தில் ரயில் வந்துள்ளது. ரயிலை பார்த்ததும் பதற்றம் அடைந்த அந்த பெண் அங்கேயே கால் தவறி கீழே விழுந்துள்ளார். படங்களில் காட்டுவது போல தண்டவாளத்தில் படுத்தபடி அச்சத்தோடு காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கத்தி இருக்கிறார். அவரை நோக்கி வேகமாக ரயில் வந்து கொண்டு இருந்தது. சுற்றி மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

முகமது மெகபூப்
அப்போது சட்டென ரயில் தண்டவாளத்தில் குதித்த முகமது மெகபூப் வேகமாக அந்த பெண்ணை நோக்கி ஓடி உள்ளார். ஆனால் அதற்குள் ரயில் அந்த பெண்ணை நெருங்கிவிட்டது. அந்த பெண்ணை தண்டவாளத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லும் அளவிற்கு முகமது மெகபூப்பிற்கு நேரமில்லை. இதனால் துரிதமாக செயல்பட்டு அந்த பெண்ணை தண்டவாளத்தின் நடுப்பகுதியில் நகர்த்தி போட்டுள்ளார்.

படுத்துக்கொண்டார்
அதாவது ரயிலுக்கு கீழே நடுவில் பாதுகாப்பாக படுத்து இருக்கும் வகையில் அந்த பெண்ணை நகர்த்தி உள்ளார். அதோடு அந்த பெண்ணுக்கு துணையாக முகமது மெகபூப்பும் தண்டவாளம் நடுவே படுத்துக்கொண்டார். தன் உயிரை பற்றி கவலைப்படாமல் அவர் இப்படி செய்துள்ளார். தண்டவாளம் நடுவே நேராக படுத்தால் பெரும்பாலும் ரயில் நம் மீது ஏறாமல் கடந்து சென்றுவிடும். ரயில் தண்டவாளங்களில் சிலர் இதை சாகசமாக செய்வது உண்டு.

காயம் இல்லை
அதேபோல் முகமது மெகபூப்பும் தனது உயிரை ரிஸ்க் எடுத்து அந்த பெண்ணை காப்பாற்றி உள்ளார். ரயில் கடந்து சென்ற பின் இரண்டு பேரும் பாதுகாப்பாக அங்கிருந்து எழுந்து வந்தனர். 28 பெட்டிகள் கொண்ட அந்த ரயில் கடந்தும் கூட இரண்டு பேருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. முகமது மெகபூப்பின் இந்த வீரதீர செயல் பெரிய பாராட்டுகளை பெற்றுள்ளது. தனது உயிரை பற்றி கவலைப்படாமல் அவர் இப்படி செயல்பட்டுள்ளார்.இது வீடியோவாக வெளியாகி உள்ளது.

பாராட்டு
அவரின் செயலுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணுடன் வந்திருந்த அவரின் பெற்றோர் முகமது மெகபூப்பை கட்டி அணைத்து அவருக்கு நன்றி தெரிவித்தனர். இந்தியாவில் பல இடங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு நிறைந்த தாக்குதல்கள் நடந்து வருகின்றன. முக்கியமாக வடமாநிலங்களில் இது போன்ற மத ரீதியான மோதல்கள் அடிக்கடி நடக்கின்றன. அப்படிப்பட்ட நிலையில் முகமது மெகபூப்பின் இந்த செயல் பலரின் இதயத்தை உருக்கி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications