முத்தையா முரளிதரனுக்கு அதிர்ஷ்டம்.. காஷ்மீரில் 25.75 ஏக்கரை ஓசிக்கு கொடுத்த அரசு.. வெடித்த சர்ச்சை
ஜம்மு காஷ்மீர்: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு சொந்தமான குளிர்பான நிறுவனத்துக்கு பாட்டில் தயாரிக்கும் ஆலை அமைப்பதற்காக ஜம்மு காஷ்மீரில் 25.75 ஏக்கர் நிலத்தை இலவசமாக ஒதுக்கியதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது ஜம்மு காஷ்மீரை ஆளும் தேசிய மாநாட்டு கட்சியின் முதல்வர் ஓமர் அப்துல்லாவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதித்துள்ளனர். தற்போது முத்தையா முரளிதரன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற முத்தையா முரளிதரன் இப்போது பிஸினஸ்மேனாக மாறிவிட்டார். இலங்கையில் குளிர்பான நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அவரது கம்பெனியின் பெயர் சிலோன் பீவெர்ஜ் என்பதாகும்.
இந்த பிசினஸை நம் நாட்டிலும் விரிவுப்படுத்தும் பணியில் முத்தையா முரளிதரன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தான் தற்போது முத்தையா முரளிதரன் நிறுவனத்தால் ஜம்மு காஷ்மீர் மாநில அரசுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. அதாவது முத்தையா முரளிதரன் நடத்தி வரும் சிலோன் பீவெர்ஜ் நிறுவனம் சார்பில் ரூ.1,600 கோடி முதலீட்டில் குளிர்பானம் மற்றும் அலுமினியம் கேன் தயாரிப்பு ஆலை என்பது ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்காக முத்தையா முரளிதரனுக்கு 25.75 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த இடத்தை முத்தையா முரளிதரன் நிறுவனத்துக்கு ஜம்மு காஷ்மீர் அரசு தான் வழங்கி உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கேளவ்ியாக எழுப்பி உள்ளன. இந்த கேள்விக்கு முதல்வர் ஓமர் அப்துல்லா பதிலளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ தரிகாமி கூறுகையில், ‛‛ஜம்மு காஷ்மீரில் இலவசமாக முத்தையா முரளிதரன் நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பதிலளிக்க வேண்டும்'' என்று கூறினார். அதேபோல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிஏ மிர், ‛‛இலவசமாக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரம் மிகவும் சீரியஸானது. இந்தியாவை சாராத ஒருவர் (முத்தையா முரளிதரன்) ஒருவர் எப்படி ஒரு பைசா செலவின்றி இலவசமாக நிலம் பெற முடியும் அரசு விளக்கம் அளித்தே ஆக வேண்டும்'' என்றார்.
இதுபற்றி விவசாயத்துறை அமைச்சர் ஜாவித் அகமது தார் கூறுகையில், ‛‛இந்த விவகாரம் என்பது வருவாய் துறை சம்பந்தப்பட்டது. இதுபற்றி எங்களிடம் எந்த தகவலும் இல்லை. இந்த விவகாரத்தின் உண்மை தன்மை பற்றி விசாரிக்கிறோம்'' என்றார். இந்த சம்பவம் என்பது காஷ்மீர் முதல் ஓமர் அப்துல்லாவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக முத்தையா முரளிதரன் நம்நாட்டில் தனது தொழிலை விரிவுப்படுத்தும் வகையில் கடந்த கடந்த ஆண்டு கர்நாடகாவில் ரூ.1,400 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தார். இதையடுத்து கர்நாடக அரசு சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் 46 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை அமைப்பதற்கான நிலத்தை ஒதுக்கீடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications