மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி.. துர்கா பூஜை ஸ்பெஷல்.. சிறைக் கைதிகளுக்கு செம விருந்து
கொல்கத்தா: துர்கா பூஜையின்போது மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளி அதிகாரிகள் சிறைக் கைதிகளுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் தொக்கு என சிறப்பு உணவுகளைத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை கொண்டாட்டம் கோலாகலமாகக் கொண்டாடப்படும். இந்நிலையில், இந்த கொண்டாட்டத்தில் இருந்து விலகியிருப்பதாக கைதிகள் உணரக் கூடாது என்பதற்காக கைதிகளுக்கு துர்கா பூஜையின்போது மட்டன் பிரியாணி, சிக்கன் தொக்கு, புலாவ் வகைகள், இறால், மீன் போன்ற உணவுகள் வழங்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து, மேற்கு வங்க சீர்திருத்த இல்லங்களுக்கான அதிகாரி கூறுகையில், சிறைக் கைதிகளுக்கான இந்த சிறப்பு மெனு துர்கா பூஜையின் ஆரம்ப நாளான அக்டோபர் 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். சிறையில் உள்ள விசாரணைக் கைதிகள் மற்றும் தண்டனை பெற்ற கைதிகள் அனைவருக்கும் மதிய மற்றும் இரவு உணவுகள் மாற்றியமைக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை தினங்களின்போது சிறந்த உணவு வழங்க வேண்டும் என்று சிறைக் கைதிகள் கோரிக்கைகள் விடுப்பார்கள். எனவே, இந்த கோரிக்கையை ஏற்று சிறப்பு உணவு வழங்குவதற்கான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி சிறைக் கைதிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். சிறைக் கைதிகளுக்காக எடுக்கப்படும் இந்த மாற்றம் நன்மை பயக்கும் வகையில் அமையும் என்று நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
சிறப்பு உணவாக சிறைக் கைதிகளுக்கு மட்டன் பிரியாணி, மீன் இறைச்சியுடன் மலபார் கீரை, மீன் இறைச்சியுடன் கூடிய பருப்புக் கடையல், பூரி மற்றும் கொண்டைக்கடலை, சிக்கன் குழம்பு, பெங்காலி இனிப்பு வகைகள், பாஸ்மதி அரிசியில் செய்த புலாவ் வகைகள், உருளைக்கிழங்குடன் கூடிய இறால் உள்ளிட்டவை ஒவ்வொரு நாளும் வழங்கப்படும். அசைவம், சைவம் என சிறைக் கைதிகளின் விருப்பதிற்கேற்ப தனித்தனியாக உணவுகள் சமைக்கப்பட்டு அவர்களுக்கு விருப்பத்துக்கு ஏற்ப வழங்க உள்ளோம்.
கைதிகளின் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றம் கொண்டு வருவதற்கு விரும்புகிறோம். சலிப்பூட்டும் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையில் இருந்து அவர்களுக்கு சிறிது இடைவெளியை ஏற்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தினரைப் பொறுத்தவரை துர்கா பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் மீன் மற்றும் இறைச்சி இல்லாமல் நிறைவடையாது.
எனவே, சிறைக் கைதிகள் அனைவரும் சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளில் நாங்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications