மட்டனின் வாசம்.. மூக்கை துளைச்சுதே.. "ஆட்டுக்கறி சமோசா".. ஆசை ஆசையா சாப்பிட்டு..கடைசியில் பார்த்தால்?
காந்தி நகர்: மட்டன் சமோசா என்றுதான் விற்பனை செய்தார்களாம்.. கடைசியில் பார்த்தால், மொத்த கும்பலும் இப்போது போலீசில் சிக்கியிருக்கிறது.
குஜராத் மாநிலம், வதோராவில் உள்ளது சிப்வாட் என்ற பகுதி.. இங்கு ஹுசைனி சமோசா கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.. இந்த பகுதியிலேயே இந்த சமோசா கடை மிகவும் பிரசித்தி பெற்றது. அதனால், சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள், இந்த கடைக்கு திரண்டு வருவார்கள்.. இதனால் நிறைய கஸ்டமர்களும் இந்த கடைக்கு கிடைத்திருக்கிறார்கள்.

விசாரணை: இந்நிலையில், நேற்றைய தினம், சமோசாவில் மாட்டிறைச்சி கலந்து விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது... இதனால், போலீசார் அதிரடியாக சென்று சமோசா கடையில் சோதனை நடத்தினார்கள்.. அப்போது நிஜமாகவே அங்கு மாட்டிறைச்சி இருப்பதை கண்டு அதிர்ந்தனர்.. பல நூறு கிலோ மாட்டிறைச்சி நிரப்பப்பட்ட சமோசாக்கள் அங்கிருந்ததை போலீஸார் கைப்பற்றினார்கள்.
இதற்கு பிறகு போலீசார் விசாரணையில் இறங்கினார்கள்.. அப்போதுதான் தெரியவந்தது இங்கு தயாராகும் மாட்டிறைச்சி சமோசாக்கள், நகரின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறதாம்.. ஆனால், அத்தனை சமோசாக்களுமே மாட்டிறைச்சியால் மட்டுமே தயார் செய்யப்பட்டிருக்கிறது. மாட்டிறைச்சி சமோசா என்று தெரியாமலேயே, நகரம் முழுவதும் பலரும் இதை சாப்பிட்டு வந்திருக்கிறார்கள்..
சமோசா: அதுமட்டுமல்ல, இந்த மாட்டிறைச்சி சமோசா செய்வதற்காகவே, 5 மாடிக்கட்டிடத்தில் பிரத்யேகமாக இடம் எடுத்துள்ளனர்.. இந்த இடத்தில்தான் மாட்டிறைச்சி சமோசா தயாரித்து வந்துள்ளனர்... இந்த கட்டிடத்தில், மாட்டிறைச்சிகளையும் நிறைய பதுக்கி வைத்திருக்கிறார்களாம்.
இதையடுத்து கடை ஓனர்கள் யூசுப் ஷேக், நயீம் ஷேக், மற்றும் ஹனிப் பதியாரா, தில்வார் பதான், மொயின் ஹப்தால் உட்பட மொபின் ஷேக் என்ற தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.. இதில் கைதான யூசுப் ஷேக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கூடுதல் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மாட்டிறைச்சி: அதாவது அப்பாவும், மாட்டிறைச்சியில் சமோசா தயாரித்து விற்கிறாராம்.. ஆனால், இவர்கள் யாருமே சமோசா தயாரிக்க முறையான அனுமதியும் பெறவில்லையாம்.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, மேலும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் மட்டனில்தான் சமோசா தயாரித்து விற்றுள்ளார்கள்.. ஆனால், மட்டன் விலை எகிறிவிட்டதால், ஆட்டுக்கறியை அவ்வளவு விலை கொடுத்து வாங்க முடியவில்லையாம். அதனால்தான் பசு மற்றும் எருமை இறைச்சியை கலந்து சமோசா தயாரித்து வந்ததாக சொல்கிறார்கள்..
விசாரணை: சமோசா ருசி நன்றாக இருக்கும், ஒவ்வொரு நாளும் அதிக அளவு சமோசாக்களை தயாரித்து நகரம் முழுவதும் உள்ள கடைகளுக்கு இவர்கள் சப்ளை செய்து வந்திருக்கிறார்கள்.. ஆனால், இத்தனை வருடமாக இவர்கள் இப்படி மாட்டிறைச்சியில் சமோசாக்களை விற்றார்கள் என்பது தெரியவில்லையாம், அதுகுறித்த விசாரணையும் நடந்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications