நட்வர் சிங்கை விட என் அப்பாவிடம் அதிக ரகசியங்கள் உள்ளன.. பிரணாப் மகள்
டெல்லி: நட்வர் சிங்கிடம் உள்ளதை விட அதிக அளவிலான விவரங்கள், தகவல்கள், ரகசியங்கள் எனது அப்பாவின் டைரிகளில் உள்ளன. ஆனால் என் அப்பா அவரைப் போல நடந்து கொள்ள மாட்டார். நம்பிக்கைத் துரோகம் சரியல்ல என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா கூறியுள்ளார்.
மறைந்த ராஜீவ் காந்தி குறித்தும், அவரது மனைவி சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி குறித்தும் பல்வேறு பரபரப்புத் தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நட்வர்சிங். இது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இதற்குப் பதிலடியாக தானும் சுயசரிதை எழுதி உண்மைகளை வெளியிடப் போவதாக சோனியா காந்தி கூறியுள்ளார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இன்னொரு முன்னாள் முக்கிய காங்கிரஸ் தலைவரும், குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நட்வர் மாதிரி நடக்க மாட்டார்
எனது தந்தை, முன்னாள் அமைச்சர் நட்வர் சிங் மாதிரி நடந்து கொள்ள மாட்டார். அவர் காங்கிரஸில் இருந்தபோதும், அரசில் இருந்தபோதும் நடந்ததை வெளியில் சொல்ல மாட்டார்.

40 வருட டைரி இருக்கு
எனது தந்தை டைரி எழுதும் பழக்கம் உள்ளவர். கடந்த 40 வருடமாக எழுதி வருகிறார். அவரிடம் பல பரபரப்பான, ரகசியமான, முக்கியமான தகவல்கள் உள்ளன. நட்வரிடம் உள்ளதை விட அதிகமாகவே உள்ளது.

என்னிடம் பத்திரமாக இருக்கிறது
அவை அனைத்தும் என்னிடம் பத்திரமாக உள்ளது. ஆனால் அதில் உள்ள சில முக்கியமான தகவல்களை யாரும் படித்து விடாதபடி அழித்து வைத்துள்ளார். சிலதனிப்பட்ட விஷயங்கள் யாருக்கும் தெரியாமல் இருப்பதுதான் நல்லது என்றும் அவர் கூறியுள்ளார்.

நம்பிக்கை துரோகம் செய்யக் கூடாது
யாருமே நம்பிக்கைத் துரோகம் செய்யக் கூடாது. அதுதான் எனது கருத்து என்றார் ஷர்மிஷ்தா.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications