வாட்டிய வறுமை.. வீடுகளில் பாத்திரம் கழுவி வளர்த்த ஹீராபென்.. தாய் பற்றி பிரதமர் மோடியின் உருக்கம்
காந்தி நகர்: பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மோடி இன்று அதிகாலை இறந்தார். அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் தான் பிரதமர் மோடிக்கும், அவரது தாய்க்கும் இடையேயான பந்தம் பற்றிய பல்வேறு விஷயங்கள் வெளியாகி வருகிறது. சிறுவயதிலேயே தாயை இழந்த ஹீரா பென் மோடி திருமணத்துக்கு பிறகு வாட்டிய வறுமையால் வீடுகளில் பாத்திரங்கள் கழுவி தங்களை வளர்த்தெடுத்ததாக பிரதமர் மோடி தனது சிறுவயது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீரா பென் குஜராத் மாநிலம் காந்திநகர் அருகே ரேசன் கிராமத்தில் வசித்து வந்தார். பிரதமர் மோடியின் தம்பியான பங்கஜ் மோடியுடன், ஹீரா பென் வசித்து வந்தார்.
சமீபத்தில் ஹீரா பென் 100வது பிறந்தநாளை கொண்டாடினார். குஜராத் தேர்தலின்போது பிரதமர் மோடி தாய் ஹீரா பென்னை சந்தித்து ஆசி பெற்றார்.

பிரதமர் மோடியின் தாய் மறைவு
இந்நிலையில் ஹீராபென் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் அகமதாபாதில் உள்ள யுஎன் மேத்தா இதய நோய் சிகிச்சை மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை 3.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. பிரதமர் மோடி குஜராத் சென்று தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர் தனது தாய் ஹீரா பென்னின் உடலை சுமந்து சென்று இறுதி சடங்குகள் செய்தார். அதன்பிறகு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

தாய் உடனான பிரதமரின் பந்தம்
பிரதமர் மோடியின் தாயார் இறப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள், உலக நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் தாயாரான ஹீராபென் பற்றியும், பிரதமர் மோடிக்கு அவருக்கு இடையேயான தாய்-மகன் பந்தம் பற்றிய சில முக்கிய விஷயங்கள் வெளியாகி வருகின்றன. அதன் விபரம் வருமாறு:

குடும்ப சூழல் என்ன?
பிரதமர் மோடியின் தந்தை பெயர் தாமோதர்தாஸ் முல்சந்த் மோடி. இவர் 1989ல் மறைந்தார். தாயாரான ஹீரா பென், கடந்த 1922ம் ஆண்டு ஜூன் 18 ம் தேதி குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள வாட்நகரில் பிறந்தார். இவருக்கு 5 மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். அதன்படி பிரதமர் மோடிக்கு பங்கஜ் மோடி, சோமா மோடி, அம்ரித் மோடி, பிரஹலாத் மோடி என்ற சகோதரர்களும், வசந்திபென் ஹஸ்முக்லால் மோடி என்ற சகோதரியும் உள்ளனர். ஹீராபென் பிரதமர் மோடியின் தம்பியான பங்கஜ் மோடியுடன் காந்தி நகர் அருகே உள்ள ரேசன் கிராமத்தில் வசித்து வந்தார்.

100வது பிறந்தநாள் பதிவு
பிரதமர் மோடிக்கும், தாய் ஹீரா பென்னுக்கும் இடையே நல்ல பந்தம் இருந்தது. இருப்பினும் பிரதமர் மோடி டெல்லியிலும், தாய் ஹீரா பென் காந்தி நகரிலும் தனித்தனியே வசித்து வந்தனர். தாய் ஹீரா பென்னின் பிறந்த நாளுக்கும், தனது பிறந்த நாளிலும் பிரதமர் மோடி குஜராத் காந்தி நகருக்கு வந்து ஆசீர்வாதம் பெற்று செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் இந்த ஆண்டு தாய் ஹீரா பென் 100வது பிறந்தநாள் கொண்டாடியபோது நரேந்திர மோடி மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். அப்போது பிரதமர் மோடி தனது தாய் பற்றி பல்வேறு விஷயங்களை அவரே ஒரு பதிவாக எழுதியிருந்தார். ‛அம்மா' என்ற தலைப்பில் பிரதமர் மோடி வெளியிட்ட அந்த பதிவில் கூறியிருந்ததாவது:

அகராதியில் வார்த்தை இல்லை
அம்மா என்பதற்கு அகராதியில் வேறு எந்த வார்த்தையும் இல்லை. இது முழு அளவிலான உணர்ச்சிகளை உள்ளடக்கியது. அன்பு, பொறுமை, நம்பிக்கைக்கு உரித்தானது. உலகம் முழுவதிலும் எந்த நாடு, எந்த பிரதேசமாக இருந்தாலும் சரி ஒவ்வொரு குழந்தைகளும் தங்கள் தாய் மீது தனி பாசம் வைத்திருக்கிறார்கள். ஒரு தாய் தன் குழந்தைகளை பெற்றெடுப்பது மட்டுமல்லாமல் அவர்களின் மனதையும், அவர்களின் ஆளுமையையும், அவர்களின் தன்னம்பிக்கையையும் வடிவமைக்கிறார். மேலும் ஒவ்வொரு தாய்மார்களும் தன்னலமின்றி சொந்த தேவைகளையும், ஆசைகளையும் தியாகம் செய்து வருகின்றனர்.

சிறுவயதில் அம்மாவை இழந்த தாய்
என்னுடைய சொந்த ஊரான வாட்நகருக்கு மிகவும் அருகே உள்ள மெஹ்சானாவில் இருக்கும் விஸ்நகரில் என் அம்மா பிறந்தார். அவருக்கு சொந்த தாயின் பாசம் கிடைக்கவில்லை. இளமையிலேயே என் பாட்டியை எனது அம்மா ஸ்பானிஷ் ப்ளூ தொற்றுக்கு பறிகொடுத்தார். என் பாட்டியின் முகம் அல்லது மடியில் படித்து தூங்கிய சுகத்தை என் அம்மாவால் அனுபவிக்க முடியவில்லை. எல்லோரையும் போல என் அம்மாவால் அவரது அம்மாவின் மடியில் இளைப்பாற முடியவில்லை. என் தாய் தனது குழந்தை பருவம் முழுவதையும் தாய் இன்றி கழித்துள்ளார். இதற்காக அம்மாவின் மீது கோபத்தை வெளிப்படுத்தியது இல்லை. குழந்தை பருவத்தை ஏழ்மை, வறுமையிலேயே என் தாய் கழித்துள்ளார்.

மூத்த மருமகளாக..
இந்தப் போராட்டம் மிகுந்த வாழ்க்கைக்கு நடுவே என் அம்மா அவரது குடும்பத்தில் மூத்த மகளாக இருந்தார். திருமணத்துக்கு பிறகு மூத்த மருமகளாகிவிட்டார். முழு குடும்பத்தையும் கவனித்து, அனைத்து வேலைகளையும் நிர்வகிக்கும் பொறுப்பை அவர் ஏற்றார். கடுமையான பொறுப்புகள் மற்றும் அன்றாட போராட்டங்கள் இருந்தபோதிலும் அம்மா முழு குடும்பத்தையும் அமைதியாகவும், தைரியமாகவும் நடத்தினார்.

வீட்டு வேலை செய்து..
நாங்கள் வசித்த வாட்நகரில் மண் சுவர்கள், களிமண் ஓடுகள் கொண்ட சிறிய வீட்டில் வசித்தோம். சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தினோம். வீட்டு வேலைகளை என் தாய் மட்டுமே செய்தார். சில வீடுகளில் பாத்திரங்களை கழுவியுள்ளார். வீட்டுச் செலவுகளுக்காக நூல் நூற்கும் பணியிலும் ஈடுபட்டார். பருத்தி பிரித்தல் முதல் நூல் நூற்று எங்களை வளர்த்தார். மழையின்போது எங்களின் வீட்டின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் விழும். இதற்காக வீட்டில் வாளி, பாத்திரங்களை வைப்பது இன்னும் நினைவில் உள்ளது.

கவுரவிக்க வரமறுத்த தாய்
நான் குஜராத்தின் முதல்வராக பதவியேற்றதும், எனது ஆசிரியர்களை கவுரவிக்க வேண்டும் என்று நினைத்தேன். அம்மா என் வாழ்வில் மிகப்பெரிய ஆசிரியையாக இருந்தார். அவரையும் நான் கவுரவிக்க வேண்டும் என்று நினைத்தேன். நம் சாஸ்திரங்கள் கூட தாயை விட பெரிய குரு இல்லை என்று குறிப்பிடுகிறது. அம்மாவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். நான் ஒரு சாதாரண மனிதன். நான் உன்னைப் பெற்றெடுத்திருக்கலாம். ஆனால் நீங்கள் இறைவன் அருளால் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளீர்கள் என கூறினார். என் தாய் தங்க நகைகள் அணிந்திருப்பதை நான் பார்த்தது இல்லை. அதில் அவருக்கு விருப்பமும் இல்லை. எப்போதும் சிறிய அறையில் மிகவும் எளிமையான வாழ்க்கை முறையைத் தொடர்வதில் விருப்பமாக இருந்தார்'' என்பன உள்பட பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு இருந்தார்.

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு
முன்னதாக இன்று தாயின் இறப்பு குறித்த அறிந்த பிரதமர் மோடி மிகவும் மனவேதனை அடைந்தார்.இதுபற்றி பிரமதர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்திருக்கிறது. துறவியின் பயணம், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளம், மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை தாயாரிடம் உணர்ந்தேன் . புத்திசாலித்தனத்துடன் வேலை செய்ய வேண்டும். தூய்மை வாழ்க்கையை வாழ வேண்டும் என 100வது பிறந்தநாளில் தாயார் சொன்ன விஷயம் எப்போதும் நினைவில் இருக்கும்" என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications