மணிப்பூரில் எல்லையில் கதவுகளை இழுத்து மூடி மியான்மர் ராணுவம் அட்டூழியம்- இதற்கு குரல் வருமா?
மணிப்பூர் எல்லையில் கதவுகளை இழுத்து மூடி மியான்மர் ராணுவம் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. காஷ்மீர், அருணாச்சல், பஞ்சாப் எல்லை அட்டூழியங்களைப் பற்றி பேசுகிறவர்கள் இதற்கு குரல் கொடுப்பார்களா? என்பது அப்ப
மோரே: மணிப்பூர் எல்லையில் இந்திய கிராமத்துக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது மியான்மர் ராணுவம். அத்துடன் எல்லை கதவுகளையும் இழுத்து மூடியிருக்கிறது மியான்மர் ராணுவம்.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அருணாச்சல் எல்லைகளைப் பற்றிதான் மத்திய அரசு கவலைப்படுகிறது. ஆனால் மணிப்பூர் எல்லையில் மியான்மர் ராணுவத்தின் அட்டூழியத்தை கேட்பார் யாரும் இல்லை.
50 ஆண்டுகளாக மணிப்பூரில் மோரே உள்ளிட்ட இடங்களின் நிலப்பகுதியை மெல்ல மெல்ல ஆக்கிரமித்துக் கொண்டே வருகிறது மியான்மர் ராணுவம். ஆனால் இதைப் பற்றி யாருமே பேசுவது இல்லை என்பதுதான் கொடுமை.

அத்துமீறும் மியான்மர் ராணுவம்
தற்போது ஹலோன்பாய் என்ற கிராமத்துக்கு சொந்தம் கொண்டாடுகிறது மியான்மர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த கிராமத்துக்குள் அத்துமீறி நுழைந்தது மியான்மர் ராணுவம்.

மர அறுவை ஆலை
அந்த மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வரும் மர அறுவை தொழிற்சாலை சூறையாடி இயந்திரங்களை அள்ளிச் சென்றது மியான்மர் ராணுவம். இயந்திரங்கங்களை இதுவரை அந்நாட்டு ராணுவம் திருப்பித் தரவில்லை.

எல்லைக் கதவுகளை பூட்டி...
இதனால் கொந்தளித்த அப்பகுதி மக்கள் மியான்மர் எல்லைக் கதவுகளை பூட்டி போராட்ட நடத்தினர். இதனால் இருநாடுகளிடையே பதற்றம் ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து கிராம மக்கள் கதவுகளைத் திறந்துவிட்டனர்.

ராணுவமே பூட்டியதால் பதற்றம்
ஆனால் மியான்மர் ராணுவம் மீண்டும் வந்து கதவுகளை பூட்டிவிட்டுச் சென்றது. இதனால் இருநாடுகளிடையேயான எல்லைப் போக்குவரத்து முற்றாக முடங்கியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications