For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நானும் ஒரு தமிழன் தான்.. தமிழே என் மூச்சு... ஜல்லிகட்டில் இறங்கனும் - ட்விட்டரில் கட்ஜூ நெகிழ்ச்சி

Google Oneindia Tamil News

டெல்லி: முற்பிறவியில் நானும் ஒரு தமிழனாகத்தான் பிறந்திருப்பேன் என்று ஆணித்தரமாக நம்புவதாக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜூ டுவிட்டியுள்ளார்.

உத்திர பிரதேச மாவட்டத்தைச் சேர்ந்த மார்க்கண்டேய கட்ஜூ ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார். மத்திய அரசு அனுமதிக்காவிட்டாலும் மாநில அரசு ஜல்லிக்கட்டினை நடத்தலாம் என்றும் ஆலோசனை கூறியிருந்தார்.

Naanum oru Tamilar - Markandeya Katju

பழம்பெரும் காப்பியங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பது போல் ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு மீதான தடை விலக்கப்பட்டு, இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்திக் கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் மகிழ்ச்சியடைந்த மார்க்கண்டேய கட்ஜூ தன்னுடைய மகிழ்ச்சியை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். "இப்பொழுதும் நான் நன்றாக தமிழ் பேசுகின்றேன். முன் ஜென்மத்தில் நான் தமிழனாகத்தான் பிறந்திருப்பேன் என்று நினைக்கின்றேன். அடுத்த ஜென்மம் இருந்தால் அப்போது நான் மீண்டும் தமிழனாக பிறந்து காளை அடக்கும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். உத்திரபிரதேசத்தில் பிறந்தாலும் நானும் தமிழன்தான். தமிழ் என் மூச்சு" என்று பகிர்ந்துள்ளார்.

English summary
Using social media justice Markandeya Katju explains the same reason for his choice of being a "Tamilian".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X