மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப ஒரே வழி பாஜக ஆட்சியை டிஸ்மிஸ் செய்வதுதான்.. நாகாலாந்து காங்கிரஸ்
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் 40 நாட்களுக்கு மேலாக நீடிக்கும் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர அம்மாநிலத்தில் ஆளும் பாஜக அரசை டிஸ்மிஸ் செய்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதுதான் ஒரே வழி என்கிறது நாகாலாந்து காங்கிரஸ்.
மணிப்பூர் மாநிலத்தில் முதலில் மைத்தேயி இனக்குழுவினரை இலக்கு வைத்து குக்கி இன மக்கள் தாக்குதல் நடத்தினர். அவர்களது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டனர். இதனால் மைத்தேயி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். இதன் பின்னர் குக்கி இனமக்களுடன் மைத்தேயி இனக்குழுவினரும் நேரடி மோதலில் ஈடுபட்டனர். இம்மோதல்கள் ஆயுதம் ஏந்திய தாக்குதல்களாகவும் மாறியது.
மணிப்பூரில் மட்டும் 50,000 பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினரிடம் இருந்து ஆயுதங்களை கொள்ளையடித்து வன்முறைகளில் ஈடுபடுவது அதிகரித்தது. இதனால் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என பலமுறை அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனாலும் பாதுகாப்பு படையினரிடம் இருந்து பறிக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டே இப்போதும் தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் இந்த தாக்குதல்கள் அரசியல்வாதிகள் பக்கம் திரும்பியுள்ளது. மணிப்பூர் மாநில அமைச்சர், மத்திய அமைச்சர் மற்றும் பாஜக தலைவர்கள் வீடுகள், அலுவலகங்கள் இலக்கு வைத்து தாக்கப்படுகின்றன. மணிப்பூர் மாநிலத்தில் பாஜக அலுவலகங்கள் சூறையாடப்பட்டும் வருகின்றன.
மத்திய அமைச்சர் அமித்ஷா முகாமிட்டு பேச்சுவார்த்தை நடத்தியும் வன்முறை வெடித்து பரவிதான் இருக்கிறதே தவிர ஓயவில்லை; இதனால் அனைத்து கட்சி எம்பிக்கள் குழுவை மணிப்பூருக்குள் அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. அதேபோல நாட்டின் பிரதமர் மோடி, இந்த வன்முறைகள் தொடர்பாக மவுனம் கலைந்து பொதுமக்களிடம் பேச வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில்தான் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட தற்போதைய ஆளும் பாஜக அரசை டிஸ்மிஸ் செய்தாக வேண்டும் என குரல் கொடுத்துள்ளது நாகாலாந்து காங்கிரஸ். மணிப்பூரில் அமைதி நிலவும் என 2021-ல் பிரதமர் மோடி வாக்குறுதி கொடுத்தார்; அது நடைபெறவில்லை; மத்திய அமைச்சர் அமித்ஷாவின் அமைதி முயற்சிகள் தோல்வி அடைந்தன; மத்திய அரசு அமைத்த அமைதிக் குழு புறக்கணிக்கப்பட்டுவிட்டது. ஆகையால் முதல்வர் பைரோன்சிங் தலைமையிலான மணிப்பூர் பாஜக அரசை டிஸ்மிஸ் செய்தால் மட்டுமே மாநிலத்தில் அமைதி திரும்ப முடியும் என்கிறது நாகாலாந்து காங்கிரஸ் கமிட்டி. மேலும் மணிப்பூர் விவகாரத்தில் நாட்டின் ஜனாதிபதியே நேரடியாக தலையிட வேண்டும் என்பதும் நாகாலாந்து காங்கிரஸின் கோரிக்கை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications