நாகாலாந்தில் பதற்றம் நீடிப்பு- இணையதளம், எஸ்.எம்.எஸ். சேவைகள் நிறுத்தம்!
திமாப்பூர்: பாலியல் பலாத்கார குற்றவாளி ஒருவனை வீதியில் பொதுமக்கள் அடித்தே கொன்ற சம்பவத்தைத் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் நாகாலாந்து மாநிலத்தில் இணைய தளங்கள், எஸ்.எம்.எஸ். சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாகாலாந்து மாநிலத்தில் நாகா இன இளம்பெண் ஒருவரை காரில் கடத்திச்சென்று பலாத்காரம் செய்ததாக பரீத்கான் என்ற இளைஞரை கைது செய்த போலீசார் திமாப்பூரில் உள்ள மத்திய சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.

கடந்த வியாழன் அன்று சிறையின் முன் திரண்ட நாகா இனத்தை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் பலாத்கார குற்றவாளிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திடீரென அவர்கள் திமாப்பூர் சிறையை உடைத்து உள்ளே புகுந்து குற்றவாளி பரீத்கானை வெளியில் இழுத்து வந்து நிர்வாணமாக்கி, சித்ரவதை செய்தனர்.
இந்த கொலைவெறித் தாக்குதலில் உயிரிழந்த பரீத்கான் பிரேதத்தை தரதரவென இழுத்துச் சென்று அருகிலுள்ள சந்திப்பு ஒன்றில் தொங்க விட்டனர்.

மக்கள் தாங்களே சட்டத்தை கையில் எடுத்துக் கொண்ட இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக திமாப்பூர் மத்திய சிறைத்துறை அதிகாரி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்பட 3 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
உள்துறை அமைச்சகம் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் நாகலாந்து மாநிலத்தில் பதற்றம் நீடிக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளம், எஸ்.எம்.எஸ். சேவைகள் ஆகியவை 48 மணிநேரத்திற்கு முடக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications