Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பவர்ஃபுல் மத்திய அமைச்சர்கள்! அதிகாரம் மிக்க பாஜக தலைவர்கள்! மோடியின் ‘கியாரண்டி’

Subscribe to Oneindia Tamil

நரேந்திர மோடி 3.0 அமைச்சரவையில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்குச் செல்வாக்கு மிக்க பாஜக எம்பிக்கள் யார் யார்?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை கடந்த ஞாயிற்றுக் கிழமை பதவியேற்றது. அதில் மீண்டும் மத்திய அமைச்சர்களாக அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.

lok sabha election 2024 NDA alliance Nirmala Sitharaman Amit Shah Rajnath Singh Nirmala Sitharaman S Jaishankar

என்.டி.ஏ கூட்டணி அரசின் அமைச்சர் முழு பட்டியல்!

#உள்துறை அமைச்சகம் மற்றும் கோ ஆபரேஷன்: அமித்ஷா

#பாதுகாப்பு அமைச்சகம்: ராஜ்நாத்சிங்

#வெளியுறவு அமைச்சகம்: எஸ் ஜெய்சங்கர்

#நிதி அமைச்சகம் மற்றும் கார்ப்பரேட் விவகாரத் துறை : நிர்மலா சீதாராமன்

#சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்: நிதின்கட்கரி

#சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் மற்றும் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் : ஜேபி நட்டா

#இளைஞர் நலன் விளையாட்டுத்துறை மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு : மன்சுக் மாண்டவியா

#உணவு பதப்படுத்தும் தொழில்துறை மற்றும் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் அடுத்து ஊரக வளர்ச்சி : சிராக் பாஸ்வான்

#மின்துறை மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் : மனோகர் லால் கட்டார்

#சுற்றுலா மற்றும் கலாச்சார துறை: கஜேந்திர சிங் ஷெகாவத்

#தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மற்றும் ரயில்வே அடுத்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப: அஸ்வினி வைஷ்ணவ்

#சிவில் விமான போக்குவரத்து துறை : கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு

#கல்வித்துறை: தர்மேந்திர பிரதான்

#பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை: அன்னபூர்ணா தேவி

#சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம்: பூபேந்திர யாதவ்

#ஜல் சக்தி துறை: சிஆர் பாட்டீல்

#நாடாளுமன்ற விவகாரத்துறை மற்றும் சிறுபான்மையினர் துறை: கிரண் ரிஜிஜு

#கனரக தொழில்கள் துறை மற்றும் எஃகு துறை: ஹெச்.டி.குமாரசாமி

#தகவல் தொடர்பு துறை: ஜோதிராதித்ய சிந்தியா

#வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை: ஜோதிராதித்ய சிந்தியா

#ஜவுளி துறை: கிரிராஜ் சிங்

#நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம் அடுத்துப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி : பிரஹலாத் ஜோஷி

#பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு: ஹர்தீப் சிங் பூரி

#குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை: ஜிதன் ராம் மஞ்சி

#பஞ்சாயத்து ராஜ்: லல்லன் சிங்

#மீன்வளம், கால்நடை வளர்ப்பு , பால்பண்ணை: லல்லன் சிங்

#வர்த்தகம் மற்றும் தொழில்துறை: பியூஷ் கோயல்

#துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி துறை: சர்பானந்தா சோனோவால்

#சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்: வீரேந்திர குமார்

#பழங்குடியினர் நலத் துறை: ஜுவல் ஓரம்

#நிலக்கரித்துறை மற்றும் சுரங்க துறை: ஜி கிஷன் ரெட்டி

இந்தப் பட்டியலில் உள்ள அமித்ஷா, பிரதமர் மோடிக்கு அடுத்து 2வது இடத்தில் இருக்கும் தலைவர். பாஜகவை 2019இல் 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறச் செய்ய மூளையாக இருந்தவர். 59 வயதாகும் அமித்ஷா, 2014இல் பாஜகவின் தேசிய தலைவரானார். அப்போது அவருக்கு வயது 49.

அவரது காலத்தில்தான் உபியில் பாஜக 73 இடங்களில் வென்றது. 54 வயதிலேயே உள்துறை அமைச்சராகப் பதவியேற்றவர். இந்தப் பதவியை இளம் வயதிலேயே அடைந்தவர் முதல் நபர் இவர்தான்.

இவரைப் போலவே செல்வாக்கு மிக்க பாஜக தலைவர் ராஜ்நாத்சிங். வியூகங்களை வகுத்துச் செயல்படுவதில் வல்லவர். கட்சியில் அடிமட்டம் வரை தொடர்பை வைத்துள்ள ஒரு சிறந்த அரசியல்வாதி. ராஜ்நாத்சிங், 1990கள் பின்னர் பாஜகவை உபியில் வளரச் செய்தவர்.

72 வயதான சிங், 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் வாழ்க்கையில் உள்ளார். மோடியின் நம்பிக்கை நட்சத்திரம் எனப் பெயர் எடுத்தவர். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் இடம்பெற்ற சீனியர் அமைச்சர்.

இவர் 2005 பாஜகவின் தேசிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மோடி முதன் முதலாகப் பிரதமராகப் பதவியேற்ற போது மத்திய உள்துறை இவர் கையிலிருந்தது.

மோடியின் கட்டுப்பாட்டில் பாஜக வந்த பிறகு நிதின்கட்கரியின் செல்வாக்கு குறைக்கப்பட்டது. காரணம், அவர் மோடியை தாண்டி கட்சியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி இருந்தார். ஆகவே, அவரை ஓரங்கட்டும் முயற்சிகள் நடந்தன. ஆனாலும், ஆர்.எஸ்,எஸ். கட்கரியை ஆதரித்து வருவதால், அவரை யாராலும் அசைக்க முடியவில்லை.

'இந்தியாவின் நெடுஞ்சாலை நாயகன்' என்று அழைக்கப்படும் பாஜக முன்னாள் தலைவர் நிதின்கட்கரி, கடுமையான உழைப்பாளி. திட்டங்களைச் செயல்படுத்துவதில் வல்லவர். திறமைசாலி. மகாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த இவருக்கு இப்போது 67 வயதாகிறது.

மோடி தலைமையிலான கடந்த இரண்டு ஆட்சிக் காலங்களிலும் மத்திய அமைச்சராகத் தொடர்ந்து நீடித்து வருகிறார். சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான அமைச்சராக நீண்ட காலம் பணியாற்றிய அமைச்சர்களில் இவரும் ஒருவர்.

கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 90,000 கிமீ தூரத்திற்குத் தேசிய நெடுஞ்சாலைகளை இவர் போட்டுள்ளார். 30,000 கிமீ தூரத்திற்கு புதிய சாலைகளையும் அமைத்த பெருமை நிதின்கட்கரிக்கு உண்டு.

பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் (2019-2024) வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியவர் எஸ் ஜெய்சங்கர். 2019 முதல் குஜராத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக ஜெய்சங்கர் 2015 முதல் 2018 வரை இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராகவும் பணியாற்றினார்.

இவரது பதவிக்காலத்தில் ரஷ்யா-உக்ரைன் மோதல், இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் கோவிட் தொற்றுநோய் போன்ற நெருக்கடிகளைச் சமாளிக்க வேண்டி இருந்தது. இவை இந்தியப் பொருளாதாரத்தை மட்டுமல்ல, முழு உலக அளவில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதை எல்லாம் இவர் தனது ஆளுமையால் சமாளித்துக் காட்டினார்.

அடுத்ததாக மோடி அமைச்சரவையின் ஆதிக்கம் மிக்க பெண் மத்திய அமைச்சர் யார் என்றால், முதலில் நினைவுக்கு வருபவர் நிர்மலா சீதாராமன். இவருக்கு முன்பாக இவர் வகுத்த நிதியமைச்சர் பதவியை அருண் ஜெட்லி, மன்மோகன் சிங், ப. சிதம்பரம் போன்ற அதி புத்திசாலிகள் கையாண்டனர். இப்போது மூன்றாவது முறையாக சீதாராமன் நிதியமைச்சராகி உள்ளார்.இந்தப் பதவியை அலங்கரித்த முதல் பெண்மணி இவர்தான்.

பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த இவர், 2014 ஆம் ஆண்டு மோடி முதன்முறையாகப் பிரதமரானபோது அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.

அடுத்ததாக அஸ்வினி வைஷ்ணவ். 1994ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி இவர். 2010 ஆம் ஆண்டு பணியை ராஜினாமா செய்துவிட்டு, ஜிஇ மற்றும் சீமென்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்தவர். மோடி 2.0 ஆட்சியில் ரயில்வே, தகவல் தொழில்நுட்பம் ஆகிய முக்கிய துறைகளைக் கவனித்தவர்.

பாஜகவின் பிரபலமான முகம் பியூஷ் கோயல். மோடி 2.0 ஆட்சியில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை உள்ளிட்ட முக்கிய அமைச்சரவைகளைக் கையாண்டவர். 59 வயதான கோயல், 2010 ஆம் ஆண்டு முதல் ராஜ்யசபா உறுப்பினராகப் பதவியிலிருந்தவர்.

மும்பையில் பிறந்த இவர், அம்மாநிலத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் படித்தார். லால்பாக் நகரில் தனது பட்டயக் கணக்கியல் பயிற்சியைத் தொடங்கினார். அடுத்து நேபியனில் முதலீட்டு வங்கியாளராகப் பணியாற்றினார்.

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பூஷன் பாட்டீலை எதிர்த்து கோயல் 3,57,608 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

அவரது தந்தை அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தில் கப்பல் துறை அமைச்சராகவும், பாஜக தேசிய பொருளாளராகவும் இருந்தவர்., மேலும் அவரது தாயார் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+