தேர்தலில் தோல்வி, ஆனா அமைச்சர்! லோக்சபா எம்பியே இல்லை, ஆனா அமைச்சர்கள்!
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நேற்று மூன்றாவது முறையாகப் பிரதமராக மோடி பதவியேற்றார். இதன்மூலம் அவர் முன்னாள் பிரதமர் நேருவின் சாதனையைச் சமன் செய்தார்.
இந்த 18ஆவது மத்திய அமைச்சரவையில் மொத்தம் 71 பேர் மோடியுடன் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் தனித்தனியே செய்துவைத்தார்.

நேற்று மோடியின் 3.0 ஆட்சியில் மத்திய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்ட சிலர் எம்பிக்கள் இல்லை என்பதும் இதில் சிலர் இந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் யார்? அவர்களின் பெயர் என்ன?
எஸ் ஜெய்சங்கர்:
குஜராத் மாநிலத்திலிருந்து இரண்டு முறை ராஜ்யசபா உறுப்பினரான தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெய்சங்கர், மோடியின் 3.0 அமைச்சரவையில் மீண்டும் மத்திய அமைச்சரவையில் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
இதன் மூலம் அவருக்கு அமைச்சரவையில் மீண்டும் இடம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 மே 31 அன்று, இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட போது இவர் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பதவி வழங்கப்பட்டது.
நிர்மலா சீதாராமன்:
ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலிருந்து இரண்டு முறை மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சீதாராமன். கேபினட் நிதியமைச்சராகக் கடந்த 2019 முதல் 2024 ஜூன் முதல் வாரம் வரை பதவியிலிருந்தார்.
இந்த முறை நடைபெற்ற 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வழக்கம் போல் தேர்தலில் போட்டியிடவே இல்லை.
ஆனால் மீண்டும் மோடி 3.0 அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் பாஜகவில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவர் இவர் என்பதை நிரூபித்துள்ளார்.
ஜேபி நட்டா:
இவரும் லோக் சபா உறுப்பினர் இல்லை. ராஜ்யசபா உறுப்பினர். பாஜகவின் தேசிய தலைவரான நட்டா நேற்று மோடி 3.0 அமைச்சரவையில் மத்திய அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
நரேந்திர மோடி முதன்முறையாகப் பிரதமராகப் பதவியிலிருந்த நவம்பர் 9, 2014 முதல் மே 30, 2019 வரை மத்திய சுகாதார அமைச்சராக நட்டா இருந்தார். இப்போது அவருக்கு மத்திய அமைச்சராகும் வாய்ப்பை அவரது கட்சி மீண்டும் வழங்கியுள்ளது.
இதன்மூலம் அவர் பாஜக தேசிய தலைவர் பதவியிலிருந்து விரைவில் விடுவிக்கப்படலாம் என்றும் அவருக்குப் பதிலாக அந்தப் பொறுப்பு வேறு ஒருவருக்கு வழங்கப்படலாம் என்றும் செய்திகள் அடிபடுகின்றன.
ராமதாஸ் அத்வாலே:
இந்தியக் குடியரசுக் கட்சி (அத்வாலே) யின் தலைவரும் ராஜ்யசபா உறுப்பினருமான ராமதாஸ் அத்வாலே இதற்கு முந்தைய அரசாங்கத்தில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக இருந்தவர்.
இவரது கட்சி மகாராஷ்டிராவில் என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. இவரது கட்சி இந்த மக்களவைத் தேர்தலில் ஒரு வேட்பாளரைக்கூட நிறுத்தவில்லை.
ஹர்தீப் சிங் பூரி:
ராஜ்யசபா எம்பியும், முன்னாள் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சருமான ஹர்தீப் சிங் பூரி, இந்த முறை மோடி 3.0 அரசில் மத்திய அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார். இவர் 1974 பேட்ச் இந்திய வெளியுறவு சேவை அதிகாரியாகப் பணி செய்தவர். இவர் 2009 முதல் 2013 வரை ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றினார். அதன்பின்னர் கடந்த ஜனவரி 2014 இல் பாஜகவில் சேர்ந்தார்.
ஜார்ஜ் குரியன்:
கேரளாவில் வழக்கறிஞரும் பாஜக மாநில பொதுச் செயலாளருமான குரியன் இந்த முறை என்.டி,ஏ கூட்டணி அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், கடந்த 40 ஆண்டுகளாகக் கேரள பாஜகவின் அமைப்பாளராக இருந்து வருகிறார்.
சதீஷ் துபே:
ராஜ்யசபா எம்.பியான இவர், பீகாரின் சம்பாரண் தொகுதியில் பிரபலமான பிராமணத் தலைவர். இவர், கடந்த 2014 மற்றும் 2019ல் லோக்சபா தேர்தலில் வால்மீகி நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். கரும்பு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தனது அரசியல் வாழ்வை அமைத்துக் கொண்டவர். அதற்காகப் போராடி வருபவர். அந்தப் பிரச்சினைகளை அரசுக்கு எடுத்துரைக்கும் ஆர்வலராக துபே முக்கியத்துவம் பெற்றவர்.

சஞ்சய் சேத்:
ராஞ்சியைச் சேர்ந்த தொழிலதிபரும் அரசியல்வாதியுமான சஞ்சய் சேத், ஒரு ராஜ்யசபா உறுப்பினர். மோடி அரசின் அமைச்சரவையில் இப்போது பதவியேற்றுள்ளார். 1976 ஆம் ஆண்டு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் மாணவர் தலைவராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி இவர், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
ராம்நாத் தாக்கூர்:
இரண்டு முறை ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். சமீபத்தில் இவரது தந்தை கர்பூரி தாக்கூருக்கு பாஜக அரசு பாரத ரத்னா விருது வழங்கியது. இந்தச் சமுகத்தின் வாக்கு வங்கியை தன் பக்கம் இழுக்கவே இந்த விருதை பாஜக வழங்கியுள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினர். அதனைத் தொடர்ந்து ராம்நாத் தாக்கூர் நேற்று மத்திய அமைச்சராகப் பதவியேற்றார்.
பிஎல் வர்மா:
ராஜ்யசபா எம்பியான பிஎல் வர்மாவும் மத்திய அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். மோடியின் கடந்த ஆட்சிக் காலத்தில் வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சித் துறையின் இணை அமைச்சராக இருந்தார் இவர்.
பபிதா மார்கெரிட்டா:
என்.டி.ஏ அமைச்சரவையில் அசாம் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ராஜ்யசபா எம்.பியான பபிதா மார்கெரிட்டா, இந்த முறை மத்திய அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
எல்.முருகன்:
தமிழக பாஜக முன்னாள் தலைவராக இருந்தவர் எல்.முருகன். கடந்த கால பாஜக ஆட்சியில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைச்சராகச் செயல்பட்டவர் எல்.முருகன்.
இவர் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தாராபுரம் தொகுதியில் பாஜக சார்பாகப் போட்டியிட்டார். ஆனால், திமுக வேட்பாளர் என். கயல்விழியிடம் 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அப்படி இருந்தும் மத்திய அமைச்சர் பதவி அவருக்குக் கடந்த முறை வழங்கப்பட்டது.
இந்த முறை திமுக வேட்பாளர் ஆ.ராசாவை எதிர்த்து நீலகிரியில் போட்டியிட்டார். ஆனால், 232627 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார். மீண்டும் இவருக்கு மத்திய அமைச்சர் பதவி இப்போது வழங்கப்பட்டுள்ளது.
ரவ்னீத் சிங் பிட்டு:
48 வயதான அரசியல்வாதி இவர். மூன்று முறை எம்.பி.யாகவும் இருந்தவர். மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். லூதியானா தொகுதியில் போட்டியிட்டார்.ஆனால் காங்கிரஸின் அம்ரீந்தர் சிங் ராஜா வாரிங்கிடம் தோல்வியைத் தழுவினார். இருந்தும் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications