டெல்லியில் பாஜகவின் பிரமாண்டக் கூட்டம் - லட்சக்கணக்கில் திரண்டனர்
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் நடந்த விகாஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சைக் கேட்க லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர்.
5 நாட்களுக்கு முன்புதான் போபாலில் நடந்த பிரமாண்டக் கூட்டத்தில் மோடி பேசினார். அதில் அத்வானியும் கலந்து கொண்டார். தொடர்ந்து திருச்சியில் நடைபெற்ற இளம்தாமரைக் கூட்டத்திலும் மோடி பேசினார். இந்த நிலையில் இன்று டெல்லியில் விகாஸ் ரேலி என்ற பெயலிரான கூட்டத்தில் மோடி பங்கேற்றுப் பேசினார்.
பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடி, முன்னேற்றத்திற்கான கூட்டம் என்ற பெயரிலான இந்தக் கூட்டத்தில் முக்கிய உரையாற்றினார்.

டெல்லியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மோடியின் இன்றைய கூட்டம் டெல்லி பாஜகவுக்கு பெரும் பலமாக அமையும் என்றும் அந்தக் கட்சி நம்புகிறது. இன்றைய கூட்டத்திற்கு 5 லட்சம் பேர் வருவார்கள் என்று பாஜக நம்பிக்கை தெரிவித்திருந்தது. அதற்கேற்ப லட்சக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்திற்கு வருமாறு 80 வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அதில், 35 நாட்டுத் தூதரகங்கள் சார்பில் பிரதிநிதிகள் வருவதாக உறுதியளித்தனர்.

இந்தக் கூட்டத்திற்காக வட மேற்கு டெல்லியின் ரோஹினி பகுதியில் ஜப்பான் பூங்காவில் பிரமாண்ட மேடையும் நிறுவப்பட்டிருந்தது. மைதானம் முழுவதும் எல்இடி திரைகளும் பொருத்தப்பட்டிருந்தன. மேலும் டெல்லியின் பல பகுதிகளிலும் திரைகளை வைத்து அவரது பேச்சை நேரடியாகவும் ஒளிபரப்பு செய்தனர்.
வரலாறு காணாத பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக தனியார் பாதுகாவலர்கள் இந்தப் பணிக்காக அமர்த்தப்பட்டனர். சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன. போலீஸாரும், புற ராணுவப் படையினரும் கூட பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
<center><center><center><center><center><center><center><center><iframe width="100%" height="315" src="//www.youtube.com/embed/XDbdfmlp3Sg" frameborder="0" allowfullscreen></iframe></center></center></center></center></center></center></center></center>
-
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications