For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமர் பதவி போட்டியில் மோடி பக்கத்தில் கூட யாருமே இல்லை.. இந்தியா டுடே சர்வேயில் சுவாரசியம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: இப்போது தேர்தல் நடந்தால் யாரை பிரதமராக தேர்ந்தெடுப்பீர்கள் என்ற கேள்விக்கு நாட்டின் பாதி பேர் நரேந்திர மோடிதான் தங்கள் சாய்ஸ் என கூரியுள்ளனர். மோடிக்கு அடுத்தபடியாக வெகு தொலைவில்தான் ராகுல் காந்திக்கு இடம் கிடைத்துள்ளது. இந்தியா டுடே நடத்தியுள்ள இந்த கருத்துக் கணிப்பு, மோடிக்கு மாற்றாக ஒரு பிரதமர் ஆளுமை இந்தியாவில் இப்போதைக்கு இல்லை என்பதை புடம் போட்டு காட்டுகிறது.

'மூட் ஆப் தி நேஷன்' என்ற பெயரில், இந்தியா டுடே-கார்வே இன்சைட்ஸ் சார்பில், ஜூலை 15-27க்கு இடைப்பட்ட காலத்தில், 19 மாநிலங்களில், 97 லோக்சபா தொகுதிகளில், 12 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட பிரமாண்ட சர்வே முடிவில் இந்த சுவாரசிய முடிவுகள் வெளியாகியுள்ளன.

Narendra Modi best suited to be India’s next PM

*நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக 50 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

*காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி 13 சதவீத ஆதரவை மட்டுமே பெற்று 2வது இடத்திலுள்ளார்.

*சோனியா காந்தி மற்றும் அரவிந்த் கேஜ்ரிவால் அதற்கு பின்னால் உள்ளனர்.

*ஆட்சிக்கு எதிரான கொந்தளிப்பு மனநிலையில் மக்கள் இல்லை என்பது இந்த சர்வே சொல்லும் பாடம்.

*2014ல் பாஜக கூட்டணி 336 தொகுதிகளை கைப்பற்றியது. ஆனால் இப்போது 304 சீட்டுகள் வரைதான் கிடைக்கும் என்கிறது சர்வே.

*இந்தியா கண்ட சிறந்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு இந்திரா காந்திக்கு முதலிடமும், வாஜ்பாய் மற்றும் மோடிக்கு முறையே, 2வது மற்றும் 3வது இடமும் கிடைத்துள்ளன.

English summary
The ‘Mood of the Nation’ poll conducted by India Today in collaboration with Karvy Insights showed PM Modi having a support of 50 per cent among the respondents.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X