பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!
சென்னை: தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றதில் இருந்தே பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் உடையிலேயே தலைமை செயலகம் மற்றும் அரசு சார்ந்த விஷயங்களில் விஜய் பங்கேற்று வருகிறார். விஜய் முதல்வராக பதவியேற்றபோதும் கூட விஜய் கோட் சூட்டிலேயே வந்திருந்தார். இதற்கு ஒரு சிலர் விமர்சனம் செய்து இருந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு இன்று நன்றி தெரிவிக்கும் போது விஜய் இதற்கு பதில் அளித்துள்ளார்.
நான் ஏன் கோட், சூட் போடக்கூடாதா?, ஆதிக்கம் செலுத்துபவர்களும், அதிகாரம் படைத்தவர்கள் மட்டும் தான் கோட் சூட் போட வேண்டுமா என்ன? என்றும், எதற்காக பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிகிறேன் என்பதற்கும் விஜய் பதில் அளித்தார். திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தேரிவிக்கும் நிகழ்வில் விஜய் பேசியதாவது:-

உங்க எல்லாருக்கும் நன்றி
தமிழக மக்கள் அனைவருக்கும் எனது வணக்கமும், நன்றிகளும்.. திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு எனது ஸ்பெஷல் நன்றிகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை இப்போது பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு அது தேர்தல் கமிஷன் விதிமுறை தான். என்னை பொறுத்தவரை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு இரண்டு கண்கள் மாதிரி.. தமிழ்நாட்டுக்கு திருச்சி எப்படி இதயமோ அதே மாதிரி எனக்கு திருச்சி கிழக்கு தொகுதி என் இதயம் மாதிரி..
ஆட்சிக்கு வந்து சில வாரங்கள் கூட ஆகல.. அதற்குள் ஆரம்பிச்சிட்டாங்க.. 6 மாதம் அமைதியாக இருப்போம் என சொன்னவர்களால் 6 நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியல.. ஆட்சிக்கு வந்த அரை மணி நேரத்திற்குள் ஆரம்பிச்சிட்டாங்க.. கல்யாண வீட்டில் கூட புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க.. நான் சொன்ன மாதிரியே நடக்குதா.. மாறி மாறி ஆண்டுக் கொண்டு இருந்த இரண்டு பேரையும் வீட்டுக்கு அனுப்பிட்டு, உங்க அண்ணனை ’முதல்வராக’ ஆக்கியிருக்கீங்க.. இல்லை.. இல்லை.. ’முதல் சேவகனாக’ ஆக்கியிருக்கீங்க.. உங்க எல்லாருக்கும் நன்றி..
கிண்டல் செய்வது எனக்கு எனர்ஜி
எனக்கு இப்போது எந்த வேலையும் இல்லை. என் வேலை மக்களுக்கு பணி செய்து கிடப்பதே.. திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு பெரம்பூர் தொகுதி ஒரு கண் என்றால், திருச்சி கிழக்கு தொகுதி இன்னொரு கண்.. எம்.ஜி. ஆரோடு நான் கம்பர் பண்ணவில்லை. அண்ணா அவர்கள் வழியில் நானும் நல்லது செய்வேன்.. இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆதரித்து இருந்தீர்கள் என்றால் இன்னும் நல்லா இருந்திருக்கும்.
எல்லா நன்மைகளையும் இனி நீங்க கண்கூடா பார்க்கத் தான் போறீங்க.. யார் எந்த நிலைமைக்கு போனாலும் ஒரு சிலர் கிண்டலாக பேசத்தானே செய்வாங்க.. இப்படி கிண்டல் செய்கிறவர்கள் எல்லாம்.. அதை மட்டும் விட்டுறாதீங்க.. நீங்கள் கிண்டல் அடிப்பது தான் எனக்கு எனர்ஜி.. எனவே அதை மட்டும் விட்டுவிடாதீர்கள்.. நீங்க தொடர்ந்து விமர்சியுங்கள்.. நான் மக்களுக்கு நல்லது செய்துகொண்டே செல்கிறேன்.. செய்துகொண்டே இருப்பேன்..
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் போடுவது ஏன்?
இப்போது நான் கோட் சூட் போட்டுக்கொண்டு வருவதையும் விமர்சித்தார்கள். ஏன் நான் ஏன் கோட், சூட் போடக்கூடாதா?, ஆதிக்கம் செலுத்துபவர்களும், அதிகாரம் படைத்தவர்கள் மட்டும் தான் கோட் சூட் போட வேண்டுமா என்ன? அப்படியெல்லாம் எதுவும் கிடையாது.. நான் என்ன கலர், கலராவா போட்டுக்கொண்டு வருகிறேன்.. இரண்டே கலர். நம்ம எல்லார் மனுசு மாதிரி பிளாக் அண்ட் ஒயிட்..
எல்லாத்துலயும் பிளாக் அண்ட் ஒயிட்டாக இந்த விஜய் இருப்பான் என்பதற்கு தான் இந்த கலர். இந்த பிளாக் கூட யார குறிக்கும் எத குறிக்கும் என்பதை நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்று உங்கள் எல்லாத்துக்கும் தெரியும்.. எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டு நச.. நசன்னு பேசுற டைப் லான் நான் கிடையாது.. என்னுடைய முந்தைய மீட்டிங்கில் கூட பார்த்து இருப்பீங்க.. 20 நிமிஷம் மட்டும் தான் பேசினேன்.. மக்கள் எல்லாரும் என்னிடம் இப்போது என்ன சொல்கிறார்கள் என்றால், "விஜய் நீங்கள் மக்களுக்கு நல்லது செய்ற வேலைய மட்டும் பாருங்க.. இப்படி விமர்சனம் செய்றவங்கள நாங்க பாத்துக்கிறோம் என்று" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications