ஜின்னா பாகிஸ்தானை பிரிக்காவிட்டால் மோடி இந்திய பிரதமராகி இருக்க மாட்டார் - காங்கிரஸ் எம்.எல்.ஏ
போபால்: முஹம்மது அலி ஜின்னா இந்தியாவிலிருந்து பாகிஸ்தானை பிரிக்காமல் இருந்திருந்தால் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தற்போதைய பதவிகளை மகிழ்ச்சியாக அனுபவித்து இருக்க முடியாது என என காங்கிரஸ் எம்.எல்.ஏ. சஜ்ஜன் சிங் தெரிவித்து உள்ளார்.
மத்திய பிரதேச முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான சஜ்ஜன் சிங் வர்மா அகர் மல்வாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவும் பாகிஸ்தான் நிறுவனருமான முஹம்மது அலி ஜின்னா ஆகியோரும் இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரித்தது அறிவார்ந்த செயல் என பாராட்டியுள்ளார்.

ஜின்னாவை சுதந்திர போராட்ட வீரர் என பாராட்டியுள்ள சஜ்ஜன் சிங் வர்மா, "ஜின்னா எப்போதும் நினைவுகூரப்பட வேண்டியவர். அவர் நாட்டை பிளவுபடுத்தவில்லை. சரியான காரியத்தையே செய்து இருக்கிறார். ஏன், அவர் சுதந்திர போராட்ட வீரர் இல்லையா?" என அவர் கேள்வி எழுப்பினார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசையும், மத்திய பிரதேசத்தை ஆளும் பாஜகவை கடுமையான விமர்சித்த சஜ்ஜன் சிங் வர்மா, "சுதந்திர போராட்ட வீரர் என்பதற்கான அர்த்தம் முஸ்லிம் என்ற காரணத்தால் மாற்றப்படுகிறது. இஸ்லாமியர் என்பதால் ஒருவர் சுதந்திர போராட்ட வீரராக மாட்டாரா? பாஜக இந்த கலாச்சாரத்தைதான் பரப்பி வருகிறது.
ஜனவரி 26 குடியரசு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும்போது, தேச பிரிவினைக்கு ஜவஹர்லால் நேருவும் முஹம்மது அலி ஜின்னாவுமே காரணம் என்று கூறினார். இரு நாடுகளாக பிரித்ததற்காக இந்த நாடே அந்த இரு தலைவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் அறிவார்ந்த செயலை செய்துள்ளார்கள்.
ஒருவேளை ஜின்னா பாகிஸ்தான் என்ற தனி நாட்டை பிரிக்கவில்லை என்றால், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தற்போதைய பதவிகளை மகிழ்ச்சியாக அனுபவித்து இருக்க முடியாது." என்றார்.












Click it and Unblock the Notifications