2 நாள் பயணமாக ஈரான் சென்றார் மோடி- சபஹர் துறைமுகம் மேம்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது!
டெல்லி: பிரதமர் நரேந்திரமோடி 2 நாள் பயணமாக நேற்று ஈரான் சென்றடைந்தார். ஈரானின் சபஹர் துறைமுகத்தை மேம்படுத்தும் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் இந்த பயணத்தின் போது கையெழுத்தாக உள்ளது.
மேற்கு ஆசியாவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் ஈரானும் ஒன்று. இந்தியாவின் எரிசக்தி தேவையை பெருமளவில் பூர்த்தி செய்யும் ஈரானுடன் நீண்ட காலமாக கலாசார, நாகரிக, பண்பாட்டு உறவுகளை இந்தியா பேணி வருகிறது.

இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் மத்திய அமைச்சர்களான சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி, தர்மேந்திர பிரதான் ஏற்கனவே அந்த நாட்டுக்கு பயணம் மேற்கொண்டு இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளனர். இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடிக்கு அந்த நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி அழைப்பு விடுத்தார்.
அதை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஈரான் புறப்பட்டு சென்றார். 2 நாள் பயணமாக சென்றிருக்கும் அவர் ஈரான் தலைவர் அயோதுல்லா அலி கமேனி மற்றும் அதிபர் ஹசன் ரவுகானி ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பிரதமரின் இந்த பயணத்தின் போது ஈரானின் சபஹர் துறைமுகத்தை மேம்படுத்த இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் மட்டுமின்றி மத்திய ஆசிய நாடுகளை இந்தியாவுடன் கடல் மார்க்கமாக எளிதில் இணைக்க முடியும்.
My first programme in Tehran was a visit to the Bhai Ganga Singh Sabha Gurudwara. pic.twitter.com/dLU2jYRlWN
— Narendra Modi (@narendramodi) May 22, 2016
இந்த சபஹர் துறைமுகம் அருகேதான் பாகிஸ்தானின் கத்வார் துறைமுகம் உள்ளது. இதனை சீனா மேம்படுத்தி பயன்பாட்டுக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இரு நாட்டு வர்த்தகம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த திட்டத்தை மேற்கொள்ள மத்திய அரசு மற்றும் தனியார் துறைகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த திட்டத்தில் இந்தியா முதல் கட்டமாக ரூ.1360 கோடி முதலீடு செய்கிறது.
இது தவிர இந்தியா, ஈரான் இடையே வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் அந்த நாட்டு அதிபருடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரான் போய் சேர்ந்த பிரதமர் மோடி அங்குள்ள குருத்வாரா ஒன்றுக்கு சென்றார். மேலும் இந்தியா-ஈரான் கலாசாரம் தொடர்பான சர்வதேச மாநாடு ஒன்றையும் தொடங்கி வைத்தார்.
டெஹ்ரான் போய் சேர்ந்த பிரதமர் மோடி தனது ட்விட்டர் தளத்தில், ஈரான் மீதான பொருளாதார தடைகளை சர்வதேச நாடுகள் நீக்கியதன் மூலம் இரு நாடுகளுக்கும் பல்வேறு துறைகளில் குறிப்பாக பொருளாதார துறையில் மிகப்பெரிய வாய்ப்புகளுக்கு வழி பிறந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவால் ஆடிப்போன சீனா... அமெரிக்காவுடன் இணைந்து மாஸ்டர் மூவ்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இந்தியாவை முடக்க சீனாவின் நரித்தனம்.. பக்காவான பிளான் Bஐ இறக்கும் இந்தியா.. பிரம்மாண்ட அஸ்திரம்! -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
ஈரான் கதை முடிந்தது? 'Mark 84 பாம்'.. டிரம்ப் வெளியிட்ட போட்டோவால் ஈரான் மக்கள் அலறல்! -
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
கட்டம்கட்டப்பட்ட ஈரான்.. இஸ்ரேல் கைக்கு வந்த 1800 Mark 84 குண்டு.. டிரம்ப் பதிவின் மெகா பின்னணி! -
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
நான் வந்துட்டேன்டா..மீண்டும் உச்சம் தொட போகும் தங்கம்! அந்த ஒரு வார்த்தைக்காக தான் உலகமே வெயிட்டிங்! -
அடங்க மறுக்கும் ஈரான்.. 2.O தாக்குதலுக்கு ரெடியாகிறதா அமெரிக்கா! டிரம்பின் திட்டம் இதுதான்!












Click it and Unblock the Notifications