மன்மோகன் காயத்துக்கு 'மருந்துபோட்ட' மோடி
டெல்லி: அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்பதைப்போல நிகழ்ந்துள்ளது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குடனான பிரதமர் நரேந்திரமோடியின் சந்திப்பு.
தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை போட்டு வாட்டி எடுத்தது பாஜக. மோடியும் தன்பங்குக்கு விளாசினார். ஆனால் மோடி பிரதமராக பதவியேற்ற உடனேயே பழைய கசப்புகளை மறக்கடிக்கும் முயற்சிகளில் ஈடுபட தொடங்கியுள்ளார். நாடாளுமன்ற மைய மண்டபத்து கூட்டத்தில் பேசிய மோடி, "முந்தைய அரசு எந்த பணியையும் செய்யாமல் இருந்ததாக நான் கூற மாட்டேன். நாட்டின் வளர்ச்சியில் அனைத்து அரசுகளுக்கும் பங்கு உள்ளது" என்று கூறி தான் செல்ல உள்ள பாதையை வெளிச்சம்போட்டு காண்பித்தார்.

இந்நிலையில்தான், நேற்று முன்தினம் மாலை மன்மோகன்சிங்கின் டெல்லி இல்லத்துக்கு மோடி நேரடியாக சென்று அவரை சந்தித்து பேசியுள்ளார். பிரதமராக இருந்த 10 ஆண்டுகாலமாக டெல்லி ரேஸ்கோர்ஸ் ரோட்டிலுள்ள 7ம் எண் வீட்டில் வசித்தார் மன்மோகன்சிங். மோடிக்காக அந்த வீட்டை விட்டு காலி செய்துவிட்டு மோதிலால் நேரு மாளிகைக்கு குடிபெயர்ந்தார். இந்த வீட்டில்தான் முன்னாள் மற்றும் இன்னாள் பிரதமர்கள் சந்திப்பு நிகழ்ந்தது.
பிரதமரை வாசல் வரை வந்து வரவேற்றனர் மன்மோகனும், அவரது மனைவி குருசரன் கவுரும். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் கொடுத்துள்ளது. மீடியாக்களுக்கு தகவல் கொடுக்காமல் சர்ப்ரைசாகத்தான் இந்த விசிட் இருந்ததாக கூறுகிறார்கள் டெல்லி ஊடகத்தார். அண்டை நாடுகளுடனே இணக்கமாக செல்ல விரும்பும் மோடி, முன்னாள் பிரதமரை மட்டும் விட்டுவிடுவாரா என்கின்றனர் பாஜகவினர்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications