பகிரங்கமாக அறிவித்தும் சந்திப்புக்கு நேரம் ஒதுக்காத மோடி.. சித்தராமையா ஷாக்.. டெல்லி விசிட் ரத்து
பெங்களூர்: காவிரி விவகாரம் குறித்து பிரதமர் மோடியுடன், டெல்லியில் இன்று 'தனிமையில்' சந்தித்து ஆலோசிக்க உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா பகிரங்கமாக பத்திரிகையாளர்களிடம் நேற்று அறிவித்த நிலையிலும், அவருக்கு சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை பிரதமர்.
காவிரி விவகாரத்தால் கர்நாடகாவில் பெரும் கலவரம் வெடித்தது. பெங்களூர் பற்றி எரிந்தது. இந்நிலையில், நேற்று அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார் முதல்வர் சித்தராமையா.
கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய சித்தராமையா, உச்சநீதிமன்றம் கூறியபடி காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தெரிவித்தார். கர்நாடகாவிற்கே தண்ணீர் இல்லை என்ற போதிலும், கனத்த இதயத்தோடு தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதாக சித்தராமையா அறிவித்தார்.

தனிப்பட்ட ஆலோசனை
சித்தராமையா மேலும் கூறுகையில், பிரதமர் மோடியை புதன்கிழமை சந்திக்க உள்ளேன். நான் மட்டுமே டெல்லி சென்று தனிமையில் அவரிடம் ஆலோசனை நடத்த உள்ளேன். இந்த சந்திப்பின்போது, தமிழக முதல்வரையும் அழைத்து பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யும்படி மோடியிடம் கேட்டுக்கொள்வேன் என்றார் சித்தராமையா.

பெங்களூரில் சித்தராமையா
பகிரங்கமாக பத்திரிகையாளர்களிடம் சித்தராமையா அறிவித்துவிட்ட நிலையிலும், இன்று முதல்வர் பெங்களூரிலேயே இருக்கிறார். பெங்களூர் மெட்ரோ ரயில் பணிகளை பார்வையிடுவதற்காக அவர் இன்று நகர்வலம் சென்றார். நகர்வலத்தை முடித்த பிறகு நிருபர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.

நேரம் ஒதுக்கவில்லை
அப்போது பதிலளித்த சித்தராமையா, மோடி அலுவலகம் நேரம் ஒதுக்கவில்லை. சந்திப்புக்கு நேரம் ஒதுக்கியதும், டெல்லி செல்ல உள்ளேன் என்றார்.

மோடி தலையீடு தவிர்ப்பு
காவிரி பிரச்சினை கோர்ட்டில் உள்ள நிலையில் பிரதமர் இதில் தலையிட முடியாது என மத்திய அமைச்சர் சதானந்தகவுடா ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில், சித்தராமையாவுக்கு பிரதமர் நேரம் ஒதுக்காதது குறிப்பிடத்தக்கது.

அவ மரியாதை
காவிரி தொடர்பாக இதுவரை 8 கடிதங்களை மோடிக்கு எழுதியதாகவும், இதுவரை மோடியிடமிருந்து பதில் வரவில்லை என்றும், ஒரு மாநில முதல்வரை இப்படி அவமரியாதையாக நடத்துவது சரியில்லை என்றும் சித்தராமையா, தனது அமைச்சரவை சகாக்களிடம் ஆதங்கம் வெளிப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications