மோடி சுதந்திர தின உரையில் எந்த வார்த்தையை எத்தனை முறை பேசினார் தெரியுமா?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று செங்கோட்டையில் 5வது முறையாக தேசிய கொடியேற்றினார்.
தேர்தலுக்கு முந்தைய சுதந்திர தின உரை என்பதால், பிரதமர் பல்வேறு வகையான அம்சங்களை தனது உரையில் குறிப்பிட்டார். இன்று அவர் 80 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார்.

அதில், விவசாயம் என்ற வார்த்தையை, 11 முறை குறிப்பிட்டார். 2014ம் ஆண்டு 0. 2015ம் ஆண்டு 4, 2016ம் ஆண்டு 13, கடந்த ஆண்டு 0 முறை, விவசாயம் என்ற வார்த்தையை பிரதமர் தனது உரையில் பயன்படுத்தினார்.
தீவிரவாதம் என்ற சொல்லை தனது உரையில், 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை உச்சரிக்கவில்லை. கடந்த ஆண்டு, 8 முறை தீவிரவாதம் என்ற வார்த்தையை மோடி பயன்படுத்தினார். இவ்வாண்டு 3 முறை மோடி இந்த வார்த்தையை உச்சரித்தார்.
வேலைவாய்ப்பு என்ற வார்த்தையை, 2014லும், 2016லும் 7 முறையும் மோடி பயன்படுத்தினார். 2015 மற்றும் 2017ம் ஆண்டில் அதை மோடி குறிப்பிடவில்லை. இவ்வாண்டு உரையில் ஒருமுறை பயன்படுத்தினார்.
விவசாயி என்ற வார்த்தையை 2014ல் 6 முறையும், 2015ல் 23 முறையும், 2016ல் 31 முறையும், கடந்த வருடம் 19 முறையும், இவ்வாண்டு 14 முறையும் மோடி உச்சரித்தார்.
ஏழ்மை என்ற வார்த்தையை, 2014ல் 29 முறை பயன்படுத்தினார் மோடி. 2015ல் 44 முறையும், 2016ல் 27 முறையும், 2017ல் 17 முறையும் இவ்வாண்டு 39 முறையும் பயன்படுத்தினார் மோடி.
காஷ்மீர் என்ற வார்த்தை, முதல் மூன்று சுதந்திர உரைகளில் இடம் பெறவில்லை. கடந்த மற்றும் இவ்வாண்டு உரையில் தலா 7 முறை பயன்படுத்தியுள்ளார் மோடி.
கருப்பு பணம் என்ற வார்த்தை முதல் மூன்று உரைகளில் இல்லை. கடந்த வருடம் 6, இவ்வருடம் 2 முறை மோடியால் உச்சரிக்கப்பட்டது.
ஊழல் என்ற வார்த்தை, 2014ல் பயன்படுத்தப்படவில்லை. 2015ல் 19, 2016 மற்றும் 2017ம் ஆண்டில் தலா 4 முறை, இந்த வருட சுதந்திர தின உரையில் 3 முறை மோடி இதை பயன்படுத்தியுள்ளார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
717 டாஸ்மாக்கை மூடுறதா சொன்னீங்களே! ஓட்டேரி லிஸ்ட்ல இல்லை? தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா வைத்த டிமாண்ட் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications