நவாஸ் ஷெரிப்புக்கு இன்று 64வது பிறந்தநாள்: நரேந்திரமோடி வாழ்த்து!
டெல்லி: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார்.
டிசம்பர் 25ம்தேதியான இன்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தனது 64-ஆவது வயதில் காலெடுத்து வைக்கிறார். இதையொட்டி டிவிட்டர் தளத்தில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஒரு வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில் "நவாஸ் ஷெரிப்பின் பிறந்த நாளான இன்று, எனது நல்வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நவாஸ் ஷெரிப் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ இறைவனிடம் நான் வேண்டிக்கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.

நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்றபோது பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்கள் அனைவருக்குமே அழைப்புவிடுத்திருந்தார். அதனையேற்று, நவாஸ் ஷெரிப்பும் இந்தியா வந்திருந்து வாழ்த்தினார். ஆனால், சில மாதங்களிலேயே இரு தலைவர்கள் இடையேயான கசப்புணர்வு அதிகரித்தது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதால் ஷெரிப்பைவிட்டு விலக ஆரம்பித்தார் மோடி.
ஆனால் பெஷாவர் நகரில் பள்ளி குழந்தைகளை தாலிபான் தீவிரவாதிகள் படுகொலை செய்தபோது, இந்தியா தனது ஆதரவை பாகிஸ்தானுக்கு அளித்தது நினைவிருக்கலாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications