கொள்ளையன் நாதுராம் பரபரப்பு வாக்குமூலம் .. ராஜஸ்தான் போலீசிடம் பேசியது என்ன?
கொள்ளையன் நாதுராம் ராஜஸ்தான் போலீசிடம் வாக்குமூலம் அளித்து இருக்கிறான்.
Recommended Video

ஜெய்ப்பூர்: கொள்ளையன் நாதுராம் ராஜஸ்தான் போலீசிடம் வாக்குமூலம் அளித்து இருக்கிறான். பல நாட்களாக போக்கு காட்டிக் கொண்டு இருந்த இவனை 4 நாட்களுக்கு முன் ராஜஸ்தான் போலீஸ் கைது செய்தது.
தற்போது இவனை ராஜஸ்தான் போலீஸ் தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. மேலும் இவன் விசாரணைக்காக சென்னைக்கு கொண்டு வரப்பட இருக்கிறான்.
ராஜஸ்தான் போலீஸ் விசாரணையில் இவன் பல முக்கிய உண்மைகளை கூறியதாக தெரியவந்து இருக்கிறது. இவனிடம் இன்னும் சில வாக்குமூலங்கள் வாங்கப்பட உள்ளது.

கொள்ளை
சென்னையில் இருக்கும் கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் 3.5 கிலோ தங்க நகைகள் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நாதுராம் குற்றச்சாட்டப்பட்டான். மேலும் நாதுராம் கூட்டாளி தினேஷ் சவுத்ரியும் உடந்தையாக செயல்பட்டான். இவர்களை போலீஸ் தேடிவந்தது.

பெரியபாண்டியன் மரணம்
மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் தன்னுடைய குழுவை அழைத்துக் கொண்டு இவனை தேடி ராஜஸ்தான் சென்றனர். அப்போது அவனின் உறவினர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டார்கள். ராஜஸ்தானில் நடந்த தேடுதல் வேட்டையில் நடந்த துப்பாக்கி சூட்டில் பெரியபாண்டியன் கொல்லப்பட்டார். நாதுராம் தப்பி ஓடினான்.

உண்மை
இந்த கொலையை முதலில் நாதுராம் செய்ததாக கூறப்பட்டது. பின் இந்த கொலையை செய்தது தமிழக போலீஸ்தான் என்ற உண்மையை ராஜஸ்தான் போலீஸ் வெளியே கொண்டு வந்தது. போலீஸ் துப்பாக்கியில் இருந்து குண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முனிசேகர் தவறுதலாக சுட்டுவிட்டதாக வாக்குமூலம் அளித்து இருந்தார்.

தேடுதல்
இந்த நிலையில் நாதுராமை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். பேஸ்புக்கில் அவன் தீவிரமாக இயங்கியும் கூட கண்டுபிடிக்கப்பட முடியவில்லை. கடந்த 4 நாட்களுக்கு முன்பு குஜராத்தில் ராஜஸ்தான் போலீஸ் அவனை கைது செய்து ராஜஸ்தான் கொண்டு வந்தது.

போலீசிடம் வாக்குமூலம்
தற்போது நாதுராம் ராஜஸ்தான் போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளான். அதில் ''காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனை தாம் சுடவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளான். இதனால் பெரியபாண்டியனை முனிசேகர் சுட்டது உறுதியாகி உள்ளது. பல நாள் குழப்பத்திற்கு இந்த வாக்குமூலம் முடிவு காட்டியுள்ளது.

விசாரணை
மேலும் ''துப்பாக்கி நடத்த துவங்கியவுடன் நாங்கள் கிளம்பிவிட்டோம். துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் நண்பனுடன் ஓடி விட்டேன். நாங்கள் திரும்பி சுடவேயில்லை'' என்றும் வாக்குமூலம் அளித்து இருக்கிறான். இவனிடம் இன்னும் சில தகவல்களை சேகரிக்க ராஜஸ்தான் போலீஸ் முடிவெடுத்து இருக்கிறது.
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications