இளையராஜா இசையில் அமிதாப் பாடும் தேசிய கீதம்!
நாட்டின் தேசிய கீதமான ஜன கண மண... அடுத்து இளையராஜா இசையில் ஒலிக்கவிருக்கிறது.
இளையராஜா, அமிதாப் பச்சன் இருவருமே இந்த கீதத்தை பாடவிருக்கிறார்கள்.

இந்தத் தகவலை இளையராஜாவும் இயக்குநர் பால்கியும் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இயக்குநர் பால்கி கூறுகையில், "நாட்டுக்கு ஒரு பங்களிப்பாக, நமது தேசிய கீதத்தை இளையராஜா இசையில் பதிவு செய்கிறோம். இதில் இளையராஜா, அமிதாப் பச்சன் இருவரும் தோன்றி, இசைக் கலைஞர்களுடன் பாடுவார்கள்.
பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் இதனை ஒளிப்பதிவு செய்கிறோம். வரும் ஜனவரி 26-ம் தேதி, குடியரசு தினத்தை முன்னிட்டு, தொலைக்காட்சிகளில் இளையராஜா இசையில் உருவான தேசிய கீதம் ஒளிபரப்பாகும்.
தேசிய கீதத்தின் மெட்டிலோ, உச்சரிப்பு முறையிலோ சிறு மாற்றம் கூட செய்யவில்லை. அதற்கு இளையராஜா உடன்படவும் மாட்டார்.
முழுக்க முழுக்க ஒரிஜினல் மெட்டில், ராஜா சார் பின்னணி இசையில் ஒலிக்கப் போகிறது. அமிதாப் பச்சன், இளையராஜா இருவருமே பாடவிருக்கிறார்கள்.
இளையராஜா, அமிதாப் பச்சன், பிசி ஸ்ரீராம் என மூன்று மேதைகள் இதற்காக ஒன்று சேர்கிறார்கள்.
இந்த ஆல்பத்தை பல்லாயிரம் பாடல்கள், இசை தந்த இளையராஜாவின் ஒலிப்பதிவுக் கூடத்துக்குள் படமாக்க வேண்டும் என்பது என் ஆசை," என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications