சன்டிகரில் தேசிய துப்பாக்கிச்சுடும் வீரர் சிப்பி சித்து கொலை: சக வீரர்கள் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சன்டிகர்: சன்டிகரில் தேசிய துப்பாக்கிச்சுடும் வீரர் சிப்பி சித்து குண்டடிபட்டு பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சன்டிகரில் உள்ள செக்டர் 27ல் இருக்கும் பூங்கா ஒன்றில் யாரோ ஒருவர் குண்டடிபட்டு பிணமாகக் கிடப்பதாக ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

National-level shooter murdered in Chandigarh

விசாரணையில் கொலையான நபர் தேசிய துப்பாக்கிச்சுடும் வீரர் சுக்மன்ப்ரீத் சிங் சித்து என்கிற சிப்பி சித்து(34) என்பது தெரிய வந்தது. வழக்கறிஞராகவும் இருந்த அவர் சன்டிகரில் உள்ள சிப்பி சித்து சட்ட நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். அவர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த மறைந்த எஸ்.எஸ். சித்துவின் பேரன் ஆவார்.

2001ம் ஆண்டு நடந்த பஞ்சாப் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சித்து அபினவ் பிந்த்ராவுடன் சேர்ந்து துப்பாக்கிச்சுடும் போட்டியில் தங்கம் வென்றவர். அவர் துப்பாக்கிச்சுடும் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார்.

இது குறித்து சன்டிகர் எஸ்.எஸ்.பி. சுக்செயின் சிங் கில் கூறுகையில்,

சித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.15 மணிக்கு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடம்பில் இரண்டு முதல் 3 குண்டுகள் இருந்தன என்றார்.

சித்துவின் மரண செய்தியை அறிந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ககன் நரங் டெல்லியில் இருந்து சன்டிகர் விரைந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+