சீனாவை வீழ்த்த மந்திரம்.. ஆர்எஸ்எஸின் அடடே யோசனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்த வாரம் சீனா செல்ல உள்ளார். இதனிடையே சீனாவை வீழ்த்த இந்தியர்கள் தங்கள் பிரார்த்தனைக்கு முன் ஒரு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

அதாவது சீனப் பிசாசின் பிடியில் இருந்து கைலாஷ், இமயமலை, திபெத் உள்ளிட்டவை விடுவிக்கப்பட வேண்டும் என்பதை இந்தியர்கள் உச்சரிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியுள்ளது.

National Security Advisor, Ajit Doval will visit China this week

டோக்லாம் எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இதனால் கடந்த சில மாதங்களாகவே எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

சீனப் பேயின் பிடியில்

இந்நிலையில் ஆர்எஸ்எஸ் தேசிய நிர்வாகி இர்ரெஷ் குமார் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் "கைலாஷ், இமயமலை அவுர் திபெத் ஆகியவை சீனாவின் பேய் பிடியில் இருந்து தப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்தியர்களின தாரக மந்திரம்

இந்த மந்திரத்தை ஒவ்வொரு இந்தியரும் தங்கள் பிரார்த்தனையை ஆரம்பிப்பதற்கு முன் ஐந்து முறை உச்சரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். விரும்புகிறது. இது சீனாவின் முக்கிய நலன்களைப் பாதிக்காது, ஆனால் முயற்சிகளில் ஆன்மீக சக்தியை ஊக்கப்படுத்துவதுடன், நேர்மறையான நடவடிக்கைகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து அத்துமீறும் சீனா

சீனா வன்முறையின் ஒரு வாக்காளியாக மாறிவிட்டது. சீனா ஒரு ஏகாதிபத்திய மற்றும் விரிவாக்க பாத்திரத்தை ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் குமார் கூறினார். இந்தியா, நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளின் பிராந்தியத்தை திபெத்திலிருந்து சீனா கைப்பற்றி வருகிறது என்றும் அவர் கூறினார்.

ஆர்எஸ்எஸின் கருத்து

டோக்லாமை பாதுகாக்க இந்திய மற்றும் பூட்டான் போர் வீரர்கள் சீன வடிவமைப்பை முன்கூட்டியே தூக்கி எறிந்தனர் என்றும் அவர் கூறினார். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே டோக்லாம் பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ஆர்எஸ்எஸ் இவ்வாறு கருத்து தெரிவத்துள்ளது.

அஜித் தோவல் பயணம்

Sikkim Stand Off : Ajit Doval to visit China soon, may resolve border tension | Oneindia News

இதனிடையே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்த வாரம் சீனா செல்லவுள்ளார். பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்த வாரம் சீனா செல்லும் அவர் டோக்லாம் பிரச்சனையை எழுப்புவார் என கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
National Security Advisor, Ajit Doval will visit China this week to take part in the BRICS summit where he is expected to raise the Doklam issue. The RSS has asked all Indians to chant a 'mantra' before their prayers. " Let Kailash, Himlaya and Tibet be delivered from the demonic clutches of China.'
Please Wait while comments are loading...